மும்பை : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானம் எப்போதுமே ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும்.
இதில் கேப்டன் ரோகித் சர்மா எப்போதுமே சிறப்பாக விளையாடி இருக்கிறார். அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அவருடைய ரெக்கார்டு பிரமிக்கும் வகையில் இருக்கிறது. ஒன்பது முறை நடைபெற்றுள்ள போட்டிகளில் ரோகித் சர்மா மூன்று முறை அரைசதம் அடித்திருக்கிறார்.

எனினும் சிஎஸ்கேவுக்கு எதிராக வான்கடேவில் கடந்த நான்கு இன்னிங்ஸில் ரோகித் சர்மா 20 ரன்களை தாண்டவில்லை என்றாலும் அதனை வேகமாக அவர் அடித்து விடுவார். இதுவரை சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா ஆடிய இன்னிங்ஸ்களை தற்போது பார்க்கலாம்.
முதல் ஆட்டத்தில் 48 பந்துகளில் 87 ரன்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா அதன் பிறகு 46 பந்துகளில் 60 ரன்கள் குவித்துள்ளார். இதைப் போன்று 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்துள்ள ரோகித் சர்மா 19 பந்துகளில் 19 ரன்கள் எடுத்துள்ளார். இதன் பிறகு 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ள ரோகித் சர்மா அதன் பிறகு ஒரு முறை கூட 20 ரன்களை தொடவில்லை.

14 பந்தில் 19 ரன்களும், 18 பந்தில் 15 ரன்களும், 18 பந்தில் 13 ரன்களும் 14 பந்தில் 18 ரன்களும் அடித்திருக்கிறார். இதனால் இம்முறை ரோகித் சர்மா பெரிய இலக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக சிஎஸ்கேவுக்கு எதிராக வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா 9 இன்னிங்ஸில் விளையாடி 320 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் சராசரி 40 ஆகும் 134 என்று வகையில் இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்றால் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மாவை விரைவில் ஆட்டம் இழக்க வைக்க வேண்டும். ரோகித் சர்மா நிலைத்து நின்று ஆடத் தொடங்கி விட்டால் அது சிஎஸ்கேவுக்கு கடினமாக மாறிவிடும்.