Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ரோகித் சர்மாவும் டக் அவுட்டும்" அடங்கிய மும்பை.. வச்சுசெய்யும் சென்னை ரசிகர்கள்.. தெறிக்கும் மீம்ஸ்

சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறியதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக டக் அவுட்டான வீரர்களில் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்தார். இதனை கிண்டல் செய்யும் செய்யும் வகையில், 5 ஐபிஎல் கோப்பைகளுடன் ரோகித் சர்மா எடுத்த புகைப்படத்திற்கு முன் சில வாத்துகளை (Ducks) நிற்க வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்ராசக்க ரகம்.

IPL 2023: Stunning Memes from Social Media after CSK beat Mumbai by 6 wickets at Chepauk

சென்னை அணியின் பவுலிங் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில், மும்பை அணியை 139 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. இதனை எம்.குமரன் படத்தில் விவேக் பேசும், "நான் அவ்ளோ ஸ்ட்ராங்கா இல்ல.. அவரு அவ்ளோ விக்கா" என்று சொல்லுவார். அதனை அப்படியே அடிவாங்கி படுத்திருப்பவரை மும்பை அணியாகவும், விவேக்கை சிஎஸ்கே பவுலர்களாகவும் மாற்றி, "நாம ஸ்ட்ராங்கா இல்ல அவங்கா வீக்கா" என்று குழம்புவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் ரசிகர்களின் குமுறல்.

IPL 2023: Stunning Memes from Social Media after CSK beat Mumbai by 6 wickets at Chepauk

அதேபோல் மும்பை அணியில் பியூஷ் சாவ்லாவை தவிர்த்து வேறு எந்த பந்துவீச்சாளரும் கட்டுபாட்டுடன் பந்துவீசவில்லை. பியூஷ் சாவ்லா மட்டும் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். நடப்பு சீசன் முழுக்க இதேநிலை தான் தொடர்ந்து வருகிறது. இதனை யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ், "கேக்கறதுக்கே கூச்சமா இருக்கு.. பசுக்கிது.. ஏதாவது சாப்பிட இருக்குமா?" என்று சொல்லுவார். அதனை அப்படியே மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தை பார்த்தி பியூஷ் சாவ்லா, "கேக்க கொஞ்சம் கூச்சமா தான் இருக்கு.. பேசாம நானே 20 ஓவரையும் போட்றவா" என்று கேட்பது போல் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

IPL 2023: Stunning Memes from Social Media after CSK beat Mumbai by 6 wickets at Chepauk

சேப்பாக்கம் மைதானத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் மும்பை அணியை வீழ்த்தி சென்னை சாதனை படைத்துள்ளது. அதேபோல் 2014ம் ஆண்டுக்கு பின் ஒரே ஐபிஎல் தொடரின் இரு போட்டிகளையும் வென்று சென்னை அணி சாதித்துள்ளது. இதனை கேஜிஎஃப் படத்தில் வரும் வயதான கதாபாத்திரம், "ரொம்ப வருஷத்துக்கு அப்றமா சாவு மேல நாங்க குதியாட்டம் போட்டோம் சார்" என்று சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடுவது போல் உருவாக்கப்பட்ட மீம் மெர்சல்.

IPL 2023: Stunning Memes from Social Media after CSK beat Mumbai by 6 wickets at Chepauk

மும்பை அணி தோல்வியடைந்த பின், அந்த அணியின் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அமைதி காத்தனர். பலரும் சென்னை அணியை வம்புக்கு இழுத்த நிலையில், சிஎஸ்கே அணி வெற்றிபெற்ற பின் மும்பை ரசிகர்களை வம்புக்கு இழுத்து வருகின்றனர். அந்த வகையில், மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலு குடித்துவிட்டு வந்த தன் தந்தை, "யோவ் கோவிந்தசாமி.. என்னையா 10 மணிக்குலாம் தூக்கம்" என்று சண்டை செய்வார். அதனை வடிவேலுவாக சென்னை அணியையும், தந்தையும் மும்பை அணியை மாற்றி அடிப்பது போல் உருவாக்கப்பட்ட மீம் தெறி.

Story first published: Saturday, May 6, 2023, 20:48 [IST]
Other articles published on May 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+