Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சிலிர்த்துபோய் சில்லறைலாம் சிதறவிட்டேன்" அர்ஷ்தீப் சிங்கை வெளுக்கும் ரசிகர்கள்.. தெறிக்கும் மீம்ஸ்!

மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 216 ரன்கள் என்ற இமாலய இலக்கை 18.5 ஓவர்களில் சேஸ் செய்து மும்பை அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள சிறந்த மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2023: Stunning Memes from social media after Mumbai beat Punjab by 4 wickets at Mohali

மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. அதில் லிவிங்ஸ்டன் 82 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 49 ரன்களும் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 53 பந்துகளில் 119 ரன்களாக இருந்தது. இதில் விலிங்ஸ்டனை அருள்மொழி வர்மனாகவும், ஜித்தேஷ் சர்மாவை வந்தியத்தேவனாகவும் உருவாக்கி வெளியிட்டுள்ள மீம் அசத்தல்.

IPL 2023: Stunning Memes from social media after Mumbai beat Punjab by 4 wickets at Mohali

நேற்றையப் போட்டியில் ஆர்ச்சர் வீசிய 4 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனை வெற்றிவேல் சக்திவேல் படத்தில் வரும் சத்யராஜ் வடிவேலுவை பார்த்து, காலங்காத்தால சோத்த போட்டு உன்னைய கார்ல கூட்டிட்டு வந்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட என்று கிண்டல் செய்வார். அதனை அப்படியே சத்யராஜாக ரோகித் சர்மாவையும், வடிவேலுவாக ஆர்ச்சரையும் மாற்றி, "பும்ரா இல்லாத குறை தெரியாம நீ பாத்துப்பனு நம்பி டீம்'ல எடுத்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

IPL 2023: Stunning Memes from social media after Mumbai beat Punjab by 4 wickets at Mohali

நீண்ட ஆட்டங்களுக்கு பின் மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் 41 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடினார். குருவி படத்தில் விஜய், "நம்ம சத்தம் மட்டும்தான் சைலென்ட்டா இருக்கும்.. அடி, சரவெடிதான்" என்று வசனம் பேசுவார். இஷான் கிஷனை விஜயாக மாற்றி, "நம்ம சைஸ் தான் சின்னதா இருக்கும்.. ஆனால் அடி.. சரவெடியா இருக்கும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ்.

IPL 2023: Stunning Memes from social media after Mumbai beat Punjab by 4 wickets at Mohali

முன்னதாக மும்பை - பஞ்சாப் மோதிய ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் அபார பந்துவீச்சால் பஞ்சாப் அணி வெற்றிபெறும். அவர் பந்தில் திலக் வர்மாவின் ஸ்டம்புகள் சிதறும். ஆனால் நேற்றையப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் திலக் வர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். இந்த இரு சம்பவங்களையும் ஒப்பிட்டு, "வெற்றி இனிமையானது தான்.. ரிவென்ஜ் எடுப்பது வெற்றியை விட இனிமையானது" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ்.

IPL 2023: Stunning Memes from social media after Mumbai beat Punjab by 4 wickets at Mohali

முன்னதாக மும்பை அணிக்கு எதிராக கடைசி ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் அர்ஷ்தீப் சிங் ஸ்டம்புகள் சிதறவிட்டதை ரசிகர்கள் பாராட்டினர். ஆனால் நேற்றையப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 3.5 ஓவர்கள் வீசி 66 ரன்களை விட்டுக் கொடுத்தார். பயணம் படத்தில் சார்லஸ், "சிலிர்த்து போய் சில்லறையெல்லாம் சிதறவிட்டேன்" என்று ஒரு நடிகரை பார்த்து சொல்லுவார். அதனை மாற்றி இந்திய ரசிகர்கள் அர்ஷ்தீப் சிங்கை பார்த்து, "அன்னைக்கு அடுத்தடுத்த பந்துல மிடில் ஸ்டம்ப் தெறிக்க விட்டத பார்த்து சிலிர்த்து போய் சில்லறையெல்லாம் விட்டெறிஞ்சேன்" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் சென்னை ரசிகர்களின் குமுறல்.

Story first published: Thursday, May 4, 2023, 8:11 [IST]
Other articles published on May 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+