Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”உயிரே.. உயிரே.. தப்பித்து எப்படியாவது ஓடிவிடு” புலம்பும் ஹர்திக்.. பல்தான்ஸின் வெறித்தன மீம்ஸ்!

சென்னை: லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, குவாலிஃபையர் 2வது போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

 IPL 2023: Stunning memes from Social Media after Mumbai won the Eliminator in playoff against Lucknow

நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதிலும் 3-0 என்ற குஜராத் அணிக்கு எதிராக தோல்வியடைந்த சூழலில், சென்னை அணி ரிவெஞ்ச் எடுத்தது. இதனை ரெண்டு படத்தில் வடிவேலு, "இதுதான் அநியாயத்த கண்டா பொங்குறதா.. நாங்களும் பொங்குவோம்ல" என்று ஒரு வசனம் செல்லுவார். அதில் வடிவேலுவை மும்பை அணியாக மாற்றி, "ஓஓ.. இதுதான் ரிவெஞ்சா.. நாங்களும் ரிவெஞ்ச் எடுப்போம்ல" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

 IPL 2023: Stunning memes from Social Media after Mumbai won the Eliminator in playoff against Lucknow

இன்னும் இரு போட்டிகளில் வெற்றிபெற்றால் மும்பை அணி 6வது கோப்பையை வெல்லும். இதனை ஜிகர்தண்டா படத்தின் வில்லன் சேது, தன்னிடம் ஒட்டுக்கேட்கும் சித்தார்த் மற்றும் கருணாகரனிடம், "நீங்க எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சரி.. நல்லா கேட்டுக்கோ.. இன்னிக்கு நீங்க வாழப் போற கடைசி நாள்" என்று மிரட்டுவார். இதில் வில்லன் சேதுவாக ரோகித் சர்மாவையும், ஒட்டுக்கேட்கும் சித்தார்த் மற்றும் கருணாகரனாக தோனி மற்றும் ஹர்திக் பாண்டியாவையும் மாற்றி, "நீங்க எவ்ளோ பெரிய டீம்னாலும் சரி.. நல்ல கேட்டுக்கோ.. இன்னும் ரெண்டு மேட்ச்ல உங்களையும் ஜெய்ச்சு கோப்பைய என் கைல எடுக்கிறேன்" என்று உருவாக்கப்பட்ட மீம் மரண மாஸ்.

 IPL 2023: Stunning memes from Social Media after Mumbai won the Eliminator in playoff against Lucknow

நேற்றையப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக ஃபீல்டிங் செய்து தீபக் ஹூடா மற்றும் கவுதமை ரன் அவுட் செய்தார். இதனால் ரோகித் சர்மாவின் ஃபிட்னெஸ் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனை பேட்ட படத்தில் வரும் சிங்காரம், பேட்ட நீயா? என்று கேட்பார். அதற்கு ரஜினி, "பேட்டயே தான்.. பேட்ட வேலன்" என்று பதில் சொல்லுவார். இதில் ரஜினியாக ரோகித் சர்மாவை மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

 IPL 2023: Stunning memes from Social Media after Mumbai won the Eliminator in playoff against Lucknow

ஒருபக்கம் டிஃபெண்டிங் சாம்பியனான குஜராத் அணியை 4 முறை சாம்பியனான சென்னை அணி வெளுக்க, இன்னொரு பக்கம் 5 முறை சாம்பியனான மும்பை அணி லக்னோவை பொளந்தது. புதிதாக இணைந்த இரு அணிகளையும் ஜாம்பவான் அணிகள் வீழ்த்தியுள்ளது. இதனை மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் சென்னை மற்றும் மும்பை அணியாக மாற்றி அடியாட்களாக குஜராத் மற்றும் லக்னோ அணிகளாக உருவாக்கியுள்ள மீம் வேற லெவல்.

 IPL 2023: Stunning memes from Social Media after Mumbai won the Eliminator in playoff against Lucknow

எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை வெற்றிபெற்றதால், அடுத்ததாக குஜராத் அணியை மும்பை அணி எதிர்கொள்ளவுள்ளது. இதனை வெற்றிக்கொடி கட்டு படத்தின் வடிவேலுவாக ஹர்திக் பாண்டியாவையும், ரோகித் சர்மாவாக பார்த்திபனை மாற்றி, "உயிரே.. உயிரே.. தப்பித்து எப்படியாவது ஓடிவிடு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்ராசக்க ரகம்.

Story first published: Thursday, May 25, 2023, 7:59 [IST]
Other articles published on May 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+