Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உள்ளூர் போட்டியில் ஆடியதே இல்லை.. நேரடியாக மும்பை அணியில் அறிமுகம்.. யார் இந்த ராகவ் கோயல்?

சென்னை: 22 வயதாகும் மிஸ்ட்ரி ஸ்பின்னரான ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராகவ் கோயல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அவர் யார், அவர் கடந்து வந்த பாதையை பற்றி பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரில் 49வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றியை பெற்றது. இதனால் சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் மும்பை அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

IPL 2023: Who is Raghav Goyal? 22 Year old Mystery Spinner Makes debut for Mumbai Indians against Chennai

மும்பை அணி சார்பாக குமார் கார்த்திகேயா நீக்கப்ப்பட்டு இடதுகை சுழற்பந்துவீச்சாளரான 22 வயதே ஆகும் ராகவ் கோயல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த முடிவை எடுத்துள்ளார். இருப்பினும் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருக்கும் சென்னை அணிக்கு எதிராக இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ராகவ் கோயலை தைரியமாக களமிறக்கப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரரான ராகவ் கோயல், அண்மையில் மும்பை டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் அபாரமாக பந்துவீசினார். மிஸ்ட்ரி ஸ்பின்னராக அறியப்படும் ராகவ் கோயல், முதல்தர போட்டிகளில் விளையாடாத வீரராவார். இன்னும் சொல்லப் போனால் சுயஷ் ஷர்மா மற்றும் ராகவ் கோயல் ஆகியோரை மும்பை அணி நிர்வாகம் சோதனை அழைத்தது. ஏலத்தின் போது ராகவ் கோயல் முன்னதாக வந்ததால், அவரை ஏலத்தில் வாங்கியது. அதேபோல் சுயஷ் சர்மாவை கொல்கத்தா அணி ஏலத்தில் வாங்கியது.

IPL 2023: Who is Raghav Goyal? 22 Year old Mystery Spinner Makes debut for Mumbai Indians against Chennai

இதனால் சுயஷ் சர்மாவை போல் ராகவ் கோயலும் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிஸ்ட்ரி ஸ்பின்னரான இவர், சிறிய வயதிலேயே துல்லியமாக பந்துவீசுவதில் கெட்டிக்காரர். இவரை பாதுகாத்து ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் பிட்ச்சில் முக்கியமான போட்டியான சென்னை அணிக்கு எதிராக களமிறக்கியுள்ளது.

Story first published: Saturday, May 6, 2023, 15:53 [IST]
Other articles published on May 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+