மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரன் குவிப்புக்கு சாதகமான மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இரு அணிகளும் 34 முறை மோதியுள்ளன.
இதில் மும்பை அணி 20 முறையும், சிஎஸ்கே 14 முறையும் வென்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 6 போட்டிகளில் சிஎஸ்கே, மும்பை அணி தலா 3 முறை வென்று இருக்கிறது. மும்பை அணி தொடரின் முதல் வெற்றிக்காக போராடும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் பேட்டிங்கில் பலமாக இருந்தாலும், வேகப்பந்துவீச்சு மிகவும் மோசமாக இருக்கிறது. அதுவும் வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற கலக்கத்தில் மஞ்சள் படை உள்ளது. தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் சிசாண்டா மகாலா சிஎஸ்கே அணிக்கு திரும்பியுள்ளார்.
இதனால் சிசாண்டாவின் வரவு சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் தனது இடத்தை தியாகம் செய்ய வேண்டும். சிஎஸ்கே அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா ஆகியோரின் பார்ம் கொஞ்சம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
சிஎஸ்கே பிளேயிங் லெவன் 1, கான்வே, 2, ருதுராஜ் கெய்க்வாட், 3, மோயின் அலி, 4, பென் ஸ்டோக்ஸ், 5,அம்பத்தி ராயுடு, 6,ஜடேஜா, 7, சிவம் துபே, 8, தோனி, 9, சிசாண்டா மகாலா, 10, தீபக் சாஹர், 11, ஹங்கர்கேகர்