IPL 2024: ஹர்திக் பாண்டியா எங்க பாஸ்.. 11 வீரர்களை கழற்றிவிட்ட அம்பானி.. புலம்பும் பல்தான்ஸ்!
மும்பை: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ள நிலையில், மும்பை அணி நிர்வாகம் தரப்பில் 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் நவ.26ஆம் தேதிக்குள் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோல் டிரேடிங் முறையிலும் வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் மொத்தமாக 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 வெளிநாட்டு வீரர்கள், 5 உள்ளூர் வீரர்களாவர். இதன் மூலம் மும்பை அணி தரப்பில் 16 வீரர்களை தக்க வைத்தும், ஒரு வீரரை டிரேடிங் மூலமும் மும்பை அணி கொண்டுள்ளது. குறிப்பாக இஷான் கிஷன் அல்லது கேமரூன் க்ரீன் இருவரில் ஒருவர் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது.
ஆனால் இருவரையும் தக்க வைத்துள்ளதாக மும்பை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் உள்ளூர் வீரர்களில் விஷ்ணு வினோஹ், அர்ஜுன் டெண்டுல்கர், நேஹல் வதேரா, குமார் கார்த்திகேயா மற்றும் ஆகாஷ் மத்வால் ஆகியோர் மட்டுமே தக்க வைத்துள்ளது. மற்ற வீரர்களான அர்ஷத் கான், ரமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், ராகவ் கோயல், தமிழக வீரர் சந்தீப் வாரியர் உள்ளிட்டோரை விடுவிப்பதாக அறிவித்துள்ளது.
அதேபோல் வெளிநாட்டு வீரர்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ஆர்ச்சர், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டப்ஸ், டூவன் யான்சன், ரிச்சர்ட்சன், கிறிஸ் ஜோர்டன், மெரிடித் ஆகியோரை விடுவித்துள்ளது. மும்பை அணி தரப்பில் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களில் அனைவரையும் விடுவித்துள்ளது. இதனால் கம்மின்ஸ், ஜெரால்ட் கோட்சியே, மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்க தீவிரமாக இருக்கும் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
Story first published: Sunday, November 26, 2023, 19:24 [IST]
Other articles published on Nov 26, 2023


Click it and Unblock the Notifications