For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன ஆச்சு கோலி உங்களுக்கு? இதை மட்டும் செஞ்சு பாருங்க.. ஆர்சிபி வேற லெவல் ஆயிடும்.. டிவில்லியர்ஸ்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி 16 சீசன்களாக ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வாங்கவில்லை. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு கூட அவர்கள் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியை பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் விராட் கோலி ரன்களை அடித்தாலும், அவர் வேகமாக ரன்கள் சேர்க்கவில்லை . இது ஆர் சி பி அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. மேலும் மேக்ஸ்வெல், கேமரன் கிரீன் போன்ற ஆர் சி பி அணியின் முக்கிய வீரர்களும் தொடர்ந்து சோபிக்க தவறி வருகிறார்கள்.

IPL 2024 - AB devilliers advices Virat kohli needed to Bat till 15 overs for RCB

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், ஆர் சி பி அணிக்கும் விராட் கோலிக்கும் ஒரு அறிவுரை வழங்கி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், விராட் கோலி ஆர் சி பி அணிக்காக ஒரு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று நான் நம்புகிறேன். ஆர் சி பி அணி நடு ஓவர்களில் கொஞ்சம் தடுமாறி வருகிறது.

இதனால் முதல் ஆறு ஓவர்களில் விராட் கோலி வெற்றிகரமாக கடந்து நடு ஓவர்களிலும் அவர் விளையாட வேண்டும். அதுதான் தற்போது ஆர்சிபி அணிக்கு மிகவும் முக்கியம். இதனால் தொடக்க சில ஓவர்களில் டுபிளசிஸ் அதிரடியாக விளையாடி ரிஸ்க் எடுக்க வேண்டும். அதன் பிறகு விராட் கோலி தம்மால் முடிந்தவரை ஆறாவது ஓவரிலிருந்து 15 வது ஓவர் வரை களத்தில் நின்று ரன் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் ஆர் சி பி அணியின் மற்ற வீரர்களும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பார்கள். இப்படி நடந்தால் ஆர் சி பி அணி வேற லெவல் மாறிவிடும். ஆர் சி பி அணிக்கு இது மோசமான தொடக்கம் கிடையாது. அதேசமயம் நல்ல தொடக்கமும் இது இல்லை. தற்போது அவர்கள் நன்றாக விளையாடி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற வேண்டும்.

என்னைக் கேட்டால் ஆர் சி பி அணி சின்னசாமி மைதானத்தில் விளையாடுவதை விட வேறு மைதானத்தில் விளையாடும்போது தான் அவர்களுக்கு வெற்றி மற்றும் அதிர்ஷ்டமும் கிடைக்கின்றது. இதனால் ஆர்சிபி அடுத்தடுத்து தற்போது வெளி ஊர்களில் விளையாட உள்ளதால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆர் சி பி அணிக்காக 157 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ் 4522 ரன்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். ஆர் சி பி அணிக்காக 157 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ் 4522 ரன்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 4, 2024, 17:26 [IST]
Other articles published on Apr 4, 2024
English summary
IPL 2024 - AB devilliers advices Virat kohli needed to Bat till 15 overs for RCB என்ன ஆச்சு கோலி உங்களுக்கு? இதை மட்டும் செஞ்சு பாருங்க.. ஆர்சிபி வேற லெவல் ஆயிடும்.. டிவில்லியர்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+