Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு.. 2 அதிரடி வீரர்களை நீக்கிய ஆஸி. ஜாம்பவான்

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் முடிவடைந்த ஒரு வாரத்தில் ஐசிசி t20 உலக கோப்பை தொடங்க இருக்கிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணியை ரோஹித் சர்மா தான் தலைமை தாங்க போகிறார் என்று ஏற்கனவே பிசிசிஐயின் செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்கும் வீரர்களில் தேர்வு செய்து t20 உலக கோப்பைக்கு அனுப்ப தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் முடிவு எடுத்திருக்கிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் இரண்டு வாரங்கள் முடிவடைந்து இருக்கிறது.

IPL 2024 - Australian Legend Brad Hogg Picks Indian team for t20 world cup

இந்த நிலையில், இதில் சிறந்து விளங்கும் வீரர்களை வைத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் பிராட் ஹாக் இந்திய அணியை தேர்வு செய்துள்ளார்.
அது குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய அணியில் தற்போது இருக்கும் முக்கிய சிக்கலே விக்கெட் கீப்பர் யார் என்பதுதான். என்னைக் கேட்டால் நான் சஞ்சு சாம்சனை தான் தேர்வு செய்வேன்.

அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடி ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக வைத்திருக்கும் வீரர்களை தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். சஞ்சு சாம்சன் கேப்டனாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தன்னுடைய தோளில் சுமத்தி பேட்டிங்கில் கொண்டு செல்கிறார்.

அதனை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். அதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும். தற்போது இந்திய தேர்வு குழுவினர் சஞ்சு சாம்சனுகுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும். இதேபோன்று ரிஷப் பண்ட், இந்த தொடரில் இரண்டு அரை சதங்கள் அடித்து இருக்கிறார். இருப்பினும் அவர் தொடர்ந்து ஒரே மாதிரி செயல்படுகிறாரா என்ற சந்தேகம் இன்னும் இருக்கிறது.

ஆனால் சஞ்சு சான்சனை நீங்கள் எடுத்துக் கொண்டால் அவரை மூன்றாவது வீரராக கூட களம் இறக்கலாம். கே எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர்களை விட சஞ்சு சாம்சன் தான் விக்கெட் கீப்பருக்கு சரியான நபராக இருப்பார். விராட் கோலி நம்பர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்தால் நிச்சயம் சஞ்சு சாம்சனுக்கு தான் ஆபத்து இருக்கிறது. மற்றபடி ரோகித் சர்மா, கில், ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சிராஜ், பும்ரா ஆர்ஸ்தீப் சிங் போன்ற வீரர்கள் இந்தியாவில் இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, April 10, 2024, 18:05 [IST]
Other articles published on Apr 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+