Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024- வீரர்களின் அடிப்படை விலை பட்டியல் வெளியீடு.. உலக கோப்பை வில்லன்களுக்கு ரூ.2 கோடி..விவரம்

ஐபிஎல் தொடரின் 2024 ஆம் ஆண்டு சீசனில் மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக ஏலம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் 10 அணிகளுக்கும் மொத்தம் 77 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் 1166 வீரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்தார்கள். ஆனால் மினி ஏலத்தில் மிகவும் குறைவான அளவிலேயே வீரர்களின் இறுதி பட்டியல் வெளியாகும்.

IPL 2024 - Base Price of Marquee Player list is released - full details

இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற்றுள்ள வீரர்களின் அதிகபட்ச விலை இரண்டு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கோடி பட்டியலில் மொத்தம் 25 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்திய வீரர்கள் ஹர்சல் பட்டேல், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கேதர் ஜாதவ், முஜிபுர் ரஹ்மான், ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், ஆட்டநாயகன் டிராவிஸ் ஹேட் , ஜாஸ் ஹேசல்வுட், ஸ்டார்க், ஸ்மித், ஆஞ்சிலோ மேத்யூஸ், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், டேவிட் வில்லி தென்னாப்பிரிக்கா வீரர் வெண்டர் டூசன், ரீய்லி ரூசோவ், இங்கிலாந்து வீரர் ஆதில் ரசித் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ஒன்றரை கோடி ரூபாய் அடிப்படை விலையாக ஆப்கானிஸ்தான் வீரர் முஹம்மது நபி, ஆஸ்திரேலியா வீர மோய்சஸ் ஹென்ரிக்யூஸ், கிறிஸ் லீன், கேன் ரிச்சர்ட்சன், டானியல் சம்ஸ், இங்கிலாந்து வீரர் டாம் கரன், கிறிஸ் ஜார்டன் ,டேவிட் மாலன், தைமல் மில்ஸ், பில் சால்ட்,நியூசிலாந்து வீரர் கோரி அண்டர்சன், காலின் முன்ரோ, ஜிம்மி நீஷம், டிம் சவுதி, இலங்கை வீரர் ஹசரங்கா ,வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஃஹோல்டர், செர்பேன் ரூத்தர்போர்ட் ஆகியோர் தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒரு கோடி ரூபாய் விலை அடிப்படை விலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஏகார், இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல், மார்டின் குப்தில், கைல் ஜேமிசன் டாரல் மிச்சல், தென்னாப்பிரிக்கா வீரர் பிரிட்டோரியஸ், டேவிட் வீசி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப் ரோமன் போவெல் ஆகியோர் தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள். உலகக் கோப்பை தொடரில் பட்டையை கிளப்பிய நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா வெறும் 50 லட்சத்திற்கு தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார்.

Story first published: Saturday, December 2, 2023, 6:56 [IST]
Other articles published on Dec 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+