Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்டியாவுக்கு ஜெய்ஷா தந்த எச்சரிக்கை.. கேப்டன் பதவி வேண்டும் என்றால் இதை செய்யுங்க!

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான தேர்வு விரைவில் தொடங்கும் என்று ஜெயிஷா அறிவித்துள்ள நிலையில் புதிய கேப்டன் யார் என்ற கேள்வியும் கூடவே எழுந்திருக்கிறது. தற்போது ரோகித் சர்மாவுக்கு 38 வயது ஆகிவிட்டதால் அவர் நீண்ட காலம் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாது.

இன்னும் சொல்லப்போனால் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தான் அவருக்கு கேப்டனாக கடைசி தொடராக இருக்கலாம். இதனால் அடுத்த கேப்டன் யார் என்ற பந்தயத்தில் ஹர்திக் பாண்டியா கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.

IPL 2024- BCCI secretary Jay shah asks Hardik Pandya to play in domestic white ball matches

ஹர்திக் பாண்டியா, குஜராத் அணிக்காக கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட நிலையில் அதன் பிறகு அவருடைய கேப்டன்ஷிப் மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது.
எனினும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு தான் துணை கேப்டன் பதவி கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அனைத்து வீரர்களும் இனி பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும்.
ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக கடந்த காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வில்லை. ஆனால் தற்போது வெள்ளை நிற கிரிக்கெட் பந்து தொடர்களில் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ சார்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

இதன் மூலம் அடுத்த கேப்டன் பதவி வேண்டும் என்றால் உடல் தகுதியை நிரூபிப்பதோடு இனி உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று ஜெயிஷா ஹர்திக் பாண்டியாவிடம் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு தொடர்ந்து வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஹர்திக் பாண்டியா முடிவெடுத்து இருக்கிறார்.

எனினும் ஹர்திக்கின் கேப்டன்சி மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரின் முதல். அணியாக வெளியேறிவிட்டது இதனால் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவிக்கு சரியான நபர் கிடையாது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. டி20 உலக கோப்பைக்கு பிறகு 2022 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறுகிறது அந்த தொடருடன் ரோகித் சர்மா விராட் கோலி போன்ற வீரர்கள் இந்திய அணியில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, May 10, 2024, 12:18 [IST]
Other articles published on May 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+