Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024- மும்பை இந்தியன்ஸ்க்கு அடி மேல் விழும் அடி.. வெளியேறும் சூர்யகுமார் யாதவ்.. காரணம் இதான்

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுத்திருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பையை வென்ற அணி என மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்திருந்த நிலையில் அதனை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி சமன் செய்து விட்டது.

சிஎஸ்கேவை பொறுத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறது. ஆனால் இந்த மூன்று ஆண்டிலும் ஒரு முறை தான் பிளே ஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி சென்று இருக்கிறது.

IPL 2024 - Big Blow For Mumbai indians as suryakumar yadav is doubtful

இதனால் கேப்டனை மாற்றி சொந்த செலவில் சூனியம் வைத்தது போல் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை நீக்கி ஹர்திக் பாண்டியாவை சேர்த்து இருக்கிறது. இதுதான் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவிக்கு திரும்பி இருப்பது வீரர்கள் மத்தியிலும் வரவேற்கப்படவில்லை.

இந்த நிலையில் பும்ரா சூரியகுமார் ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது சூரிய குமார் யாதவ், ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். சூரியகுமார் யாதவுக்கு தற்போது ஹெரனியா பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக 8 முதல் 10 வாரத்திற்கு அவர் முழு ஓய்வில் இருக்கப் போகிறார். அதன் பிறகு அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தன்னுடைய உடல் தகுதியை மீட்க போகிறார்.

சூரியகுமார் டி20 உலக கோப்பையில் முக்கிய வீரராக திகழ்வதால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என தெரியவில்லை. இதனால் தமது உடல் தகுதி இன்னும் நூறு சதவீதம் பெறவில்லை என்று கூறி ஐபிஎல் தொடரிலிருந்து அவர் விலக அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சூரியகுமார் யாதவ் விளையாடவில்லை என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என தெரிகிறது.

சூரியகுமார் மேற்கொள்ள உள்ள இந்த அறுவை சிகிச்சையை கண்காணிக்க பிசிசிஐ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் முடிவெடுத்திருக்கிறது. சூரியகுமார் யாதவுக்கு முழு உதவியும் பிசிசிஐ வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது. ஐபிஎல் தொடருக்கு முன்பு சூரியகுமார், முழு உடல் தகுதியை பெற்று விட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Story first published: Monday, January 8, 2024, 10:28 [IST]
Other articles published on Jan 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+