Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை சரி செய்யலனா, சிஎஸ்கேக்கு கோப்பை கிடையாது.. MI எதிரான ஆட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்த பிரச்சினை

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சிஎஸ்கே அணி தற்போது ஆறாவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன்னுடைய கடைசி சீசனின் விளையாடுகிறார்.

இதனால் தோனியை வெற்றியுடன் வழி அனுப்ப வேண்டும் என்ற உற்சாகத்தில் சிஎஸ்கே வீரர்கள் விளையாடுகின்றனர். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அந்த அணியில் பல பிரச்சனைகள் இன்னும் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

IPL 2024 - Big draw back for csk as they need to change 2 players in next game

தோனி கடைசி கட்டத்தில் அபாரமாக விளையாடி ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்தது மற்றும் பதிரானா அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை எடுத்தது மட்டும் இந்த போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இல்லை என்றால் சிஎஸ்கே அணி செய்த தவறுக்கு நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றி பெற்றிருக்கும்.

இதனால் சிஎஸ்கே அணியில் இருக்கும் பிரச்சனைகளை அந்த அணி நிர்வாகம் உடனே சரி செய்ய வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறக்கி இருப்பது மிகப்பெரிய மோசமான முடிவு. மூன்றாவது வீரராக ருதுராஜை களம் இறக்குவதை விட அவர் தொடக்க வீரராக விளையாடுவது சரியானதாக இருக்கும்.

அதே சமயம் ரஹானே தொடர்ந்து தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பை வீணடித்து வருகிறார். மேலும் ரகானேவுக்கு பார்ம் அவுட்டாகி விட்டதால் அவருக்கு போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ரஹானே இடத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி பயன்படுத்தலாம். பிளேயிங் லெவனில் இருந்தாலும்,அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் ரஹானேவை உட்கார வைத்துவிட்டு அந்த இடத்தில் சமீர் ரிஸ்வியை விளையாட வைப்பது சரியான முடிவாக இருக்கும். இதேபோன்று டேரல் மிட்செல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவருக்கு பதில் அனுபவ வீரர் மோயின் அலியை பிளேயிங் லெவனில் சேர்ப்பது தான் சரியான முடிவாக இருக்கும்.மோயின் அலி சுழற் பந்து வீச்சையும் வீசுவார் என்பதால் சிஎஸ்கே அணிக்கு அது கூடுதல் சாதகமாக இருக்கும். மோயின் அலி மற்றும் சமீர் ரிஸ்வி என இருவரும் நடுவரிசையில் விளையாடுவது சிஎஸ்கே அணியில் இருக்கும் நடுவரிசை பிரச்சனையை அது சரி செய்ய உதவும்.

Story first published: Monday, April 15, 2024, 7:15 [IST]
Other articles published on Apr 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+