CSK vs DC : திட்டத்துடன் வந்த தோனி.. ஜடேஜா, துபே திணற காரணம் இதுதான்.. திருத்திக்கொள்ளுமா சிஎஸ்கே?
விசாகப்பட்டினம் : டெல்லி அணியின் பவுலர்களின் லைன் மற்றும் லெந்தை மாற்ற ஜடேஜா மற்றும் சிவம் துபே ஆகியோர் முயற்சிக்காததே சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றுள்ளது. தோனியின் பேட்டிங் அசத்தலாக அமைந்தாலும், சிஎஸ்கே அணியின் தோல்விக்கு 2 பேட்ஸ்மேன்களின் மோசமான செயல்பாடுகளே காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக ரஹானே மற்றும் மிட்சல் இருவரும் நல்ல ரன் ரேட்டுக்கு ஆட்டத்தை மாற்றி கொண்டு வந்தனர்.

அதன்பின் ஜடேஜா மற்றும் சிவம் துபே இருவரும் அதிரடியாக விளையாடி இருந்தாலே வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் ஜடேஜா கடைசி வரை பேட்டிங் செய்தும் 17 பந்துகளில் 2 பவுண்டரி மட்டுமே அடித்து 21 ரன்கள் சேர்த்தார். அதேபோல் சிவம் துபே 17 பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரையும் டெல்லி அணி பவுலர்கள் எளிதாக சமாளித்தது தான் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருவருமே இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால், டெல்லி அணி பவுலர்கள் ஆஃப் சைட் லைன் மற்றும் லெந்திலேயே தொடர்ச்சியாக பந்து வீசினர். இதனால் இருவருமே பவுண்டரி அடிக்க முடியாமல் திணற, அதே திட்டத்தை டெல்லி அணி தீவிரமாக செயல்படுத்த தொடங்கியது. டெல்லி அணியின் திட்டத்தையும், பவுலர்களின் லைன் மற்றும் லெந்தை மாற்றுவதற்காக இருவருமே எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆனால் சிஎஸ்கே அணியின் மூத்த வீரரான தோனி, எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஒய்டு யார்க்கரை எளிதாக பவுண்டரிக்கு விளாசி அசத்தினார். மீண்டும் இன்னொரு பவுண்டரி அடித்த போது, வேறு வழியில்லாமல் டெல்லி பவுலர்கள் லைன் மற்றும் லெந்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒய்டு யார்க்கர் திட்டத்தை முறியடிக்க, பேட்ஸ்மேன்கள் ஆஃப் ஸ்டம்ப் கார்டை எடுத்து பேட்டிங் செய்தாலே போதுமானது.
தோனி வந்ததும் ஆஃப் ஸ்டம்ப் கார்டை எடுத்து எளிதாக பவுண்டரி, சிக்சரை விளாசினார். இந்த திட்டத்தை ஜடேஜா மற்றும் துபேவால் செயல்படுத்த முடியவில்லை. இதனால் வரும் போட்டிகளிலாவது இருவரும் மாற்று திட்டங்களுடன் பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும் என்று ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளது.
Story first published: Monday, April 1, 2024, 9:13 [IST]
Other articles published on Apr 1, 2024


Click it and Unblock the Notifications