CSK vs LSG : சிஎஸ்கே மெகா ரெக்கார்டு.. டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனை.. ஐபிஎல் தொடரில் நம்பர் 1 இடம்
சென்னை : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 210 ரன்கள் குவித்தது. அதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 200 ரன்களை கடந்து ரன் குவித்த அணிகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது சிஎஸ்கே அணி.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ரன்களும், சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்களும் குவித்தனர். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. இது சிஎஸ்கே அணியின் 34வது 200க்கும் அதிகமான ஸ்கோர் ஆகும்.

இதன் மூலம் உள்ளூர் டி20 அணிகள், டி20 லீக் அணிகள் மற்றும் சர்வதேச டி20 அணிகளையும் சேர்த்து பார்த்தால் கூட அதிக முறை 200 ரன்களை கடந்த அணிகளின் பட்டியலில் இங்கிலாந்து கவுன்டி அணியான சோமர்செட்டுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது சிஎஸ்கே அணி. இந்த இரண்டு அணிகளும் 34 முறை 200 ரன்களுக்கும் அதிகமாக ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளன.
இந்தப் பட்டியலில் இந்திய டி20 அணி 32 முறை 200க்கும் அதிகமான ஸ்கோர் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் யார்க்ஷயர் அணிகள் 29 முறை 200க்கும் அதிகமான ஸ்கோர் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளன.
14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
மேலும், ஐபிஎல் தொடரில் மட்டும் சிஎஸ்கே அணி 31 முறை 200க்கும் அதிகமாக ஸ்கோர் எடுத்துள்ளது. அந்த வகையில் பெங்களூரு அணியை விட 5 முறை அதிகமாக இதை செய்து இருக்கிறது சிஎஸ்கே அணி. சிஎஸ்கே அணி இந்த சாதனையை செய்த போதும் லக்னோ அணி 19.3 ஓவர்களில் 211 ரன்கள் என்ற கடினமான இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications