For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"தந்தை போல் உணர்கிறேன்"- தேஷ்பாண்டே, ஷர்துல் வைத்து சாதித்த சிஎஸ்கே.. காரணமே பிராவோவின் திட்டம் தான்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29 வது லீக் ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தியது. 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 26 ரன்கள் எடுத்தும் அந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் துளியும் இல்லை.

காரணம் மும்பை இந்தியன்ஸ் அதே மைதானத்தில் கடந்த முறை ஆர்சிபிஐ எதிர்கொண்டபோது 197 என்ற இலக்கை வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 15 புள்ளிகளை மூன்றாவது ஓவரில் எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி எட்டியது.

IPL 2024 CSK vs MI - Dwayne Bravo Lauds CSK star Tushar deshpande and shardul thakur

இதனால் சிஎஸ்கே அணி 240 ரன்கள் அடித்திருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் சிஎஸ்கே அணி நேற்றைய ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் பதிரானா 28 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சிஎஸ்கே பந்துவீச்சில் ஒருவர் மட்டும் சரியாக செயல்பட்டால் போதுமா மற்றவர்களும் சரியாக செயல்பட வேண்டும் அல்லவா? நேற்றைய ஆட்டத்தில் பார்த்துக்கொண்டால் துஷார் தேஷ் பாண்டே நான்கு ஓவர்கள் வீசி வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இதைப்போன்று ஷர்துல் தாக்கூர் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் மட்டும் தான் நான்கு ஓவர் வீசி 55 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதை பார்க்கும் போது துஷார் தேஷ் பாண்டே மற்றும் சர்துல் தாக்கூரின் திறமையான செயல்பாடு இந்த போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

IPL 2024 CSK vs MI - Dwayne Bravo Lauds CSK star Tushar deshpande and shardul thakur


இன்னும் சொல்லப்போனால் ஆட்டத்தின் நெருக்கடியான கட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக பந்து வீசி இருக்கிறார்கள். 15 வது வீசிய சர்துல் தாக்கூர், இரண்டு ரன்களையும் 16 வது ஓவரில் வீசிய தேஷ்பாண்டே மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதுதான் ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதை அடுத்து போட்டி முடிந்தவுடன் தேஷ்பாண்டே மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோரை பிராவோ கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிராவோ, துசார் தேஷ்பாண்டே, சர்துல்தாகூர் ஆகியோர் வளர்வதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு தந்தையைப் போல் உணர்கிறேன். உங்கள் தந்தையை பெருமைப்படுத்தி விட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார். பிராவோ வகுத்துக் கொடுக்கும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதால் தான் சிஎஸ்கே வின் பந்துவீச்சு ஒரு அளவுக்கு முன்னேற்றத்தை கண்டு இருக்கிறது.

Story first published: Monday, April 15, 2024, 15:55 [IST]
Other articles published on Apr 15, 2024
English summary
IPL 2024 CSK vs MI - Dwayne Bravo Lauds CSK star Tushar deshpande and shardul thakur "தந்தை போல் உணர்கிறேன்"- தேஷ்பாண்டே, ஷர்துல் வைத்து சாதித்த சிஎஸ்கே.. காரணமே பிராவோவின் திட்டம் தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+