Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பத்த வச்சிட்டியே பரட்டை..டி20 உலககோப்பையில் ஹர்திக் பாண்டியாவை சேர்க்க கூடாது..ஆதாரத்துடன் எதிர்ப்பு

மும்பை : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பான இந்திய அணி வரும் மே மாதத்திற்குள் அறிவிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் இந்திய அணியில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற குழப்பம் ரசிகர்களுக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஏனென்றால் ஸ்டார் வீரர்கள் பலர் ஃபார்மில் இல்லாமல் இருக்கிறார்கள். அணியின் தொடக்க வீரர்? விக்கெட் கீப்பர் யார்? ஆல்ரவுண்டர் யார்? சுழற் பந்துவீச்சாளர் யார் என்ற குழப்பம் இன்றும் நீடித்து வருகிறது.

IPL 2024 CSK vs MI - Hardik pandya should not be selected in t20 world cup says cricket experts

இந்த நிலையில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் சேர்க்க கூடாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். காயத்திலிருந்து திரும்பி வந்துள்ள அவர் கடந்த மூன்று போட்டிகளில் ஒரு ஓவர்தான் வீசி இருக்கிறார். அதில் 13 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். அதில் எந்த விக்கெட்டையும் அவர் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் தூல், ஹர்திக் பாண்டியா குறித்து பேசுகையில் ஹரந்திக்கின் உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போது முதல் ஓவரையே ஹர்திக் பாண்டியா வீசி தான் நலமாக இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் உணர்த்த நினைத்தார்.

ஆனால் அது தேவையே இல்லை. ஏனென்றால் அவர் அப்போதுதான் காயத்திலிருந்து திரும்பி வந்திருந்தார். தற்போது மீண்டும் அவர் பந்து வீசவில்லை. இதன் மூலம் அவருக்கு உடல் நிலையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. ஹர்திக் பாண்டியா அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். நிச்சயமாக அவரிடம் பிரச்சனை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை என்றால் அவரை எப்படி டி20 உலக கோப்பையில் சேர்க்க முடியும். இந்தியாவின் டாப் ஆறு பேட்டர்களில் ஹர்திக் பாண்டியாவும் இருக்கிறாரா? ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமை என இரண்டும் இருந்தால் தான் அவர் முக்கிய வீரராக அணியில் இருக்க முடியும்.

வெறும் பேட்டிங்கிற்காக சேர்க்க வேண்டிய சூழல் தற்போது இந்திய அணியில் இல்லை. என்னை கேட்டால் தற்போது அவர் பந்து வீசவும் இல்லை, பேட்டிங்கும் சரியாக விளையாடுவதில்லை. இதனால் நிச்சயம் ஹர்திக் பாண்டியாவுக்கு சவால்கள் காத்திருக்கிறது என்று ஹர்ஷா போக்லே கூறியுள்ளார்.

Story first published: Sunday, April 14, 2024, 16:12 [IST]
Other articles published on Apr 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+