Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபிலன் ருதுராஜ் அடிச்ச ஷாட்டை, மிரண்டு பார்த்த ரங்கன் வாத்தியார் தோனி.. இது சிஎஸ்கேவின் சார்பட்டா

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலே சார்பட்டா பரம்பரை போல் ஒரு அணி இருக்கிறது என்றால் அது நமது சிஎஸ்கே அணி தான். எப்படி ரங்கன் வாத்தியார் குத்துச்சண்டை அரங்கில் தன் கையால் கட்டி போட்டு பின் தமக்கு பின்னால் வருபவர்களை வழி நடத்துகிறாரோ, அதேபோல் சிஎஸ்கே வின் கேப்டனாக இருந்த தோனி தற்போது ராஜினாமா செய்து விட்டு ருதுராஜை சாதாரண வீரராக வழி நடத்துகிறார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் எப்படி கபிலன் தன்னுடைய குருநாதரின் கவனத்தை ஈர்க்க சிறப்பாக ஆடுவார். அதேபோல் ஒரு சம்பவத்தை இன்று கேப்டன் ருதுராஜ் செய்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பேட்டிங் தடுமாறியது. ரஹானே ஐந்து ரன்களில் வெளியேறினாலும், மூன்றாவது வீரராக களமிறங்கிய ருதுராஜ் ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதுவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் என்பதால் ருதுராஜ் பேட்டிங் இன்று மெர்சலை கலப்பும் விதமாக இருந்தது.

IPL 2024 CSK VS MI - Ruturaj gaikwad shot over extra cover appreciated by MS Dhoni

குத்து சண்டை உலகில் எப்படி சார் பட்டா பரம்பரைக்கும் இடியாப்ப பரம்பரைக்கும் ஆகவே ஆகாது. அதேபோல் தான் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியும் மும்பை அணியும் இடியாப்ப பரம்பரை முன் என் குருநாதர் தோற்க கூடாது என்ற ஒரே வெறியால் கபிலன் பாக்ஸிங் களத்திற்கு வருவாரோ, அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி குறைவான இலக்கை எடுத்து விடக்கூடாது என்றும் தோனி மானம் போய்விடக்கூடாது என்பதற்காகவும் ருதுராஜ் கடுமையாக இன்று போராடினார்.

அப்போது ஒரு பந்தை நகர்ந்து வந்து கவர் திசையில் தூக்கி ருதுராஜ் அடிக்க அது சிக்ஸருக்கு சென்றது. இந்த சாட்டை பார்த்தவுடன் அங்கிருந்த மும்பை ரசிகர்களுமே உற்சாகத்தில் கொண்டாடினர். மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சாக்கான நிலையில் ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து கொண்டு இந்த போட்டியை பார்த்த தோனியும் பரவாயில்லையே என்பது போல் ஒரு ரியாக்ஷன் கொடுத்தது தான் ஹைலைட்டே. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Sunday, April 14, 2024, 21:40 [IST]
Other articles published on Apr 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+