For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

MI vs DC- பவுலர்கள் கொஞ்சம் கூட திருந்த மாட்டீங்களா? இதை எப்போ கத்துக்க போறீங்க..ரிஷப் பண்ட் விளாசல்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் ரிஷப் பண்ட் தலைமையில் களம் இறங்கிய டெல்லி அணி தற்போது பத்தாவது இடத்திற்கு புள்ளி பட்டியல் சென்றுள்ளது. விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி நான்கு தோல்வி என இரண்டு புள்ளிகளுடன் அந்த அணி கடைசி இடத்தில் இருக்கிறது.

டெல்லி அணியின் ரன் ரேட் மைனஸ் 1.37 என்ற அளவில் இருக்கிறது. இந்த நிலையில் டெல்லி அணியில் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் பந்துவீச்சில் அவர்கள் செய்யும் சில தவறு அந்த அணிக்கு எமனாக அமைந்து விடுகிறது.

IPL 2024 - Delhi capitals Rishabh Pant blames Bowlers for the loss

இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிராக டெல்லி அபாரமாக செயல்பட்டாலும் கடைசி ஓவரில் 32 ரன்களை அந்த அணி விட்டுக் கொடுத்தது. இது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர்களுடன் பேசிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட், மும்பைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறும் வாய்ப்பில் தான் இருந்தோம்.

ஆனால் எங்களுடைய பேட்டிங்கில் பவர் பிளேவில் நாங்கள் அதிக ரன்களை சேர்க்கவில்லை. அந்த இடத்தில் வாய்ப்பைத் தவற விட்டோம். இதுபோன்று ஒரு பெரிய இலக்கை நீங்கள் துரத்த போகிறீர்கள் என்றால் பவர் பிளேவில் நிச்சயம் மிகப்பெரிய ரன்களை அடிக்க வேண்டும். பவர் பிளேவில் கோட்டை விட்டாலும் நாங்கள் அடுத்த சில ஓவர்களில் அபாரமாக விளையாடினோம்.

இது போன்ற இலக்கு எதிர்கொள்ளும் போது ஒவ்வொரு ஓவரிலும் 15 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வரும். அது மிகவும் நெருக்கடியை கொடுக்கும் நிச்சயம் சுலபம் கிடையாது. நாங்கள் பந்து வீச்சில் சில ஓவர்கள் சொதப்பி விட்டோம் என்று நினைக்கின்றேன். ஆனால் இது அனைத்து போட்டிகளிலுமே தொடர்கதையாக இருப்பது தான் வேதனையாக இருக்கிறது.

பவுலர்கள் சரியான முறையில் பந்து வீச வேண்டும். இது போன்ற ஆடுகளங்களில் பந்தின் வேகத்தை அடிக்கடி மாற்றி செயல்பட வேண்டும். அதை நாங்கள் செய்யவே இல்லை. பவுலர்கள் ஆடுகளத்தில் உள்ள சூழலை சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பந்து வீச வேண்டும். எங்களுடைய டெட் பவுலிங் மிகவும் மோசமாக இருக்கிறது. பேட்டிங்கில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இவ்விரண்டிலும் நாங்கள் முன்னேறினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.

Story first published: Monday, April 8, 2024, 6:45 [IST]
Other articles published on Apr 8, 2024
English summary
IPL 2024 - Delhi capitals Rishabh Pant blames Bowlers for the loss MI vs DC- பவுலர்கள் கொஞ்சம் கூட திருந்த மாட்டீங்களா? இதை எப்போ கத்துக்க போறீங்க..ரிஷப் பண்ட் விளாசல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+