For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL - உலக மகா ட்விஸ்ட் டா சாமி..மும்பை - குஜராத் - மும்பை.. 2 மணி நேரத்தில் கைமாறிய ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பே பல ட்விஸ்ட் மற்றும் அதிர்ச்சிகளை வழங்கி இருக்கிறது. ஆம் உலகக்கோப்பை தொடர் முடிந்த உடனே ஐபிஎல் ட்ரான்ஸ்ஃபர் தொடங்கியது.

இதில் ஒரு அணியிடமிருந்து மற்றொரு அணி வீரர்களையும் இல்லை பணமாகவோ மாற்றிக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன் படி குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியானது .

IPL 2024 - Gujarat titans Retained Hardik Pandya made huge blow to Mumbai indians plan

இது நூறு சதவீதம் உறுதி என பலரும் கூறி வந்தனர்.
மும்பை அணியில் போதிய ஆல்ரவுண்டர் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதற்கான பணத்தை மும்பை அணி குஜராத் இடம் வழங்கியதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் ஐபிஎல் வீரர்கள் பட்டியலை குஜராத் அணி வெளியிட்டது. இதில் ஹர்திக் பாண்டியாவை தாங்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்தான் கேப்டன் என்றும் குஜராத் அணி அறிவித்து இருக்கிறது

இது நடப்பாண்டின் மிகப்பெரிய ட்விஸ்ட் ஆக பார்க்கப்பட்டது. இது மும்பை அணி ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள். தூதுவன் வருவான் மாறிப் பொழியும் என ஆயிரத்தில் ஒருவன் வசனத்தை எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்காக போட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், மாலை 7.15மணி அளவில் மீண்டும் ஒரு டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதன் படி, குஜராத் அணியும்,ஹர்திக் பாண்டியாவும் கேட்ட தொகையை வழங்க மும்பை அணி முன்வந்துள்ளது. அதன் படி, தற்போதைய நிலவரப்படி மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா எதிர்பார்த்தது போல் கைமாற்றப்பட்டார். ஒரே நாளில் 2 அணியில் இடம்மாறி ஹர்திக் பாண்டியா புதிய டிவிஸ்டை வைத்திருக்கிறார். ஹர்திக் திரும்பி இருப்பதால் மும்பை ரசிகர்கள் காட்டில் மும்மாரி பொழிவது உறுதி தான்.

Story first published: Sunday, November 26, 2023, 18:01 [IST]
Other articles published on Nov 26, 2023
English summary
IPL 2024 - Gujarat titans Retained Hardik Pandya made huge blow to Mumbai indians plan IPL - உலக மகா டிவிஸ்ட் டா சாமி.. மும்பை தலையில் விழுந்த இடி.. டாடா காட்டிய ஹர்திக் பாண்டியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+