Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 - சாமிக்கு கற்பூரம் ஏத்திய ஹர்திக்.. தேங்காய் உடைத்த பவுச்சர்.. மும்பை அணியின் வீடியோ

மும்பை : மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி தன்னுடைய முதல் பயிற்சி நாளை இன்று தொடங்கியது. இதில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினார். மும்பை அணி கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா அண்மையில் நீக்கப்பட்டு குஜராத் அணியிலிருந்து வந்த ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இது மும்பை அணி மத்தியில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சி முகாமை ஒவ்வொரு அணியும் தொடங்கி இருக்கிறது.

IPL 2024 - Hardik Pandya Entered to Mumbai indians camp ad Mark boucher breaks coconut for God

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு நுழைந்தார். அப்போது மும்பை அணி பயிற்சியாளர்கள் அவரை வரவேற்றனர். நேராக டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த சாமி போட்டோவுக்கு மாலை அணிவித்த ஹர்திக் பாண்டியா கற்பூரம் கொளுத்தி வேண்டினார்.

அதன்பிறகு அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சரை அழைத்து தேங்காய் கொடுத்தார். இதனை அடுத்து மார்க் பவுச்சர், தரையில் தேங்காவை உடைத்து வழிபட்டார். அதன் பிறகு ஹர்திக் பாண்டியா தாம் கொண்டு வந்த இனிப்பு பெட்டியை எடுத்து அங்கிருந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கினார்.நீண்ட நாட்களுக்குப் பிறகு மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்திருப்பதை மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் விரும்பவில்லை. பலரும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வீடியோவுக்கு கீழே சென்று இந்த தொடரில் நாங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் இந்த பயிற்சி முகாமில் ஸ்டார் வீரர்கள் யாரும் திரும்பவில்லை வெறும் ஹர்திக் பாண்டியாவும் மார்க் பவுசர் மட்டும்தான் அந்த வீடியோவில் தென்பட்டார்கள். இதனால் மும்பை அணியில் பிளவு இருப்பது இந்த வீடியோ மூலம் உண்மையா போன்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடந்த சனிக்கிழமையை முடிவடைந்த நிலையில் ரோகித் சர்மா பும்ரா ஆகியோர் இந்த முகாமில் வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 11, 2024, 20:49 [IST]
Other articles published on Mar 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+