Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL : குஜராத் ஓனருக்கே விபூதி அடித்த அம்பானி.. மும்பை இந்தியன்ஸ்க்கு திரும்பும் ஹர்திக் பாண்டியா

மும்பை : ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து, அந்த அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணிக்கு திரும்பப் பெற குஜராத் அணியிடம் பேரம் பேசி முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் வரலாற்றில் கோப்பை வென்று கொடுத்த ஒரு அணியின் கேப்டனை மற்றொரு அணி பேரம் பேசி நேரடியாக வாங்குவது என்பது நடந்ததே இல்லை.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளர் சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் ஆகும். 2022 ஐபிஎல் தொடரில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகம் ஆனது. அப்போது ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து, முதல் தொடரிலேயே கோப்பை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.

IPL 2024 : Hardik Pandya shift to Mumbai Indians after he had differences with Gujarat Titans

2023 ஐபிஎல் தொடரிலும் இறுதிப் போட்டி வரை வந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. அந்த வகையில் இரண்டு தொடர்களில் பங்கேற்று இரண்டிலும் தன் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்து அதில் ஒரு முறை கோப்பை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்று இருந்தார் ஹர்திக் பாண்டியா.

இப்படி ஒரு சிறந்த கேப்டனாக இருந்த போதும், மும்பை இந்தியன்ஸ்-க்கு அவரை இடம் மாற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு பின் பல வெளிவராத உண்மைகள் இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

2023 ஐபிஎல் தொடரின் போது குஜராத் டைட்டன்ஸ் உரிமையாளருக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் மனக் கசப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. அதனை அடுத்து அவர் அந்த அணியை விட்டு விலகும் முடிவை அப்போதே எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. அப்போதே அவர் தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் உரிமையாளரான அம்பானி குடும்பத்தினரிடம் இது பற்றி பேசியதாகவும், அதை அடுத்தே அவரை அணி மாற்றம் செய்ய வேண்டிய வேலைகளை அப்போதே மும்பை அணி தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் விதிப்படி ஏலம் இல்லாமல் இதுபோன்ற அணி மாற்றம் செய்யும் போது. ஒரு வீரரை தங்கள் அணிக்கு பெற்றுக் கொண்டு, பதிலுக்கு மற்றொரு மாற்று வீரரை அந்த அணிக்கு அளிக்க வேண்டும். அந்தந்த வீரர்களின் மதிப்பு போக இருக்கும் வித்தியாசத்தை பணம் கொடுத்து ஈடுகட்ட வேண்டும்.

அதன்படி ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விட்டுக் கொடுக்கும் என கூறப்படுகிறது. ஆனால், அது நடக்க வாய்ப்பு குறைவு. ஜோஃப்ரா ஆர்ச்சரை 8 கோடி கொடுத்த வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவரால் எந்த பலனும் ஏற்படவில்லை. கடந்த இரண்டு சீசன்களாக அவர் காயத்தால் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. அதனால், ஜோஃப்ரா ஆர்ச்சரை அளித்து விட்டு, ஹர்திக் பாண்டியாவை அழைத்துக் கொள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, November 24, 2023, 23:09 [IST]
Other articles published on Nov 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+