Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - விதியை மீறியதா மும்பை அணி? ஜடேஜாவுக்கு ஒரு நியாயம்? ஹர்திக்கிற்கு ஒரு நியாயமா? ரசிகர்கள் கோபம்

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பு பல ஆச்சரியங்களை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் சென்றார்.இதனை அடுத்து குஜராத் அணியின் புதிய திட்டமாக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் விதியை மீறி மும்பை அணி செயல்பட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். இது குறித்து சிலர் கருத்து தெரிவிக்கையில் குஜராத் அணி ஹர்திக் பாண்டியாவை தக்க வைத்த பிறகு எவ்வாறு மும்பை அணி அவரை வாங்கியது என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

IPL 2024 - Hardik Pandya transfer - Did Mumbai indians plays against the rules

ஆனால் வீரர்கள் தக்கவைத்து கொள்ளப்பட்ட பிறகும் ஏலத்திற்கு முன்பாக ஒரு வாரம் வரை அதாவது டிசம்பர் 12ஆம் தேதி வரை வீரர்களை ஒவ்வொரு அணியும் மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ஒரு வீரர் வேண்டுமென்றால் முதலில் நேரடியாக அணி நிர்வாகத்திடம் தான் பேச வேண்டும். அதை மீறி தனிப்பட்ட வீரரிடம் பேசி எங்கள் அணிக்கு வாருங்கள் என்று கூறினால் அது ஐபிஎல் சட்டப்படி குற்றமாகும்.

இப்படிதான் 2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் விளையாடி வந்த ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு செல்வதற்கு காய் நகர்த்தினார். ஆனால் இது குறித்து ராஜஸ்தான் அணி புகார் அளிக்க,ஜடேஜா ஒரு ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதேபோன்று லக்னோ அணி பஞ்சாப்பில் இருந்த கேஎல் ராகுலை அணுகி தங்கள் அணிக்கு வாருங்கள் என கூறியதும் அது குறித்து பஞ்சாப் அணி புகார் அளித்ததும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவை மட்டும் மும்பை அணி எவ்வாறு அணுகி எங்கள் அணிக்கு வாருங்கள் என்று பேரம் பேசலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஐபிஎல் விதிகளுக்கு மீறிய செயல் என்றும் ஜடேஜாவுக்கு தடை விதித்தது போல் இறுதி போட்டியில் அவருக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

மும்பை அணி நேரடியாக குஜராத்திடம் அணுகி ஹர்திக் பாண்டியாவை தாருங்கள் என்று கேட்டதற்கு ஆதாரமே இல்லை என்றும், ஹர்திக் பாண்டியா தான் தமக்கு இவ்வாறு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அதனை தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குஜராத் அணியிடம் பேசுகிறார்கள் கூறப்படுகிறது. இதன் மூலம் தெளிவாக ஐபிஎல் விதிகள் மீறப்பட்டுள்ள நிலையில் மும்பை அணி இது தலையிட்டு இருக்கிறது என்பதால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ரசிகர்கள் குற்றம் சாத்தியுள்ளனர்.

Story first published: Monday, November 27, 2023, 20:06 [IST]
Other articles published on Nov 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+