Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி அணிக்காக விளையாடனும்.. விராட் கோலிக்காக கோப்பையை வெல்ல வேண்டும்.. ஆஃப்கான் வீரர் ஜத்ரான்!

மும்பை: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்றும், விராட் கோலியுடன் இணைந்து கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆசை இருப்பதாகவும் ஆஃப்கான் வீரர் இப்ராஹிம் ஜத்ரான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடக்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க 1,166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் இந்தியாவில் இருந்து 830 வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் 10 ஐபிஎல் அணிகளால் மொத்தமாக 77 இடங்களை மட்டுமே நிரப்ப முடியும்.

IPL 2024 - I want to join in RCB and want to win the IPL Trophy with Virat Kohli says Afghan Player Ibrahim Zadran

அதில் 30 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 47 இந்திய வீரர்களின் இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. இதனால் எந்தெந்த வீரருக்கு ஜாக்பாட் அடிக்கும் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அதிகளவில் ஏலத்தில் வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஏராளமான வீரர்கள் டி20 லீக் மற்றும் டி10 லீக் தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு அணிகளின் திட்டங்களில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர தொடக்க வீரரான இப்ராஹிம் ஜத்ரான் ஏலத்தில் வாங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் குறித்து இப்ராஹிம் ஜத்ரான் பேசுகையில், ஒவ்வொரு வீரரையும் போல் எனக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதுதான் எனது கனவு என்றும் சொல்லலாம்.

அதேபோல் ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் விராட் கோலி இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை. இம்முறை அவருடன் இணைந்து பயணித்து கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுவரை 94 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜத்ரான் 1,712 ரன்களை விளாசியுள்ளார். அதில் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 31 பேட்டிங் சராசரி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 8, 2023, 20:10 [IST]
Other articles published on Dec 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+