Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடல் தாண்டி நாறி போன ஆர்சிபி மானம்.. உலகம் முழுவதும் தெரிஞ்சு போச்சு.. பிற விளையாட்டு வீரர் கூட கேலி

பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி கடந்த 16 ஆண்டுகளாக விளையாடி வரும் நிலையில் ஒருமுறை கூட ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை. ஆர் சி பி அணியில் இத்தனைக்கும் ஸ்டார் வீரர்கள் இருந்தும், ஏதேனும் ஒரு தவறு செய்து யாருமே தோற்க முடியாத போட்டியை கூட தோற்றுவிடுவார்கள்.

சமீபத்தில் ஆர்சிபி மகளிர் அணி கூட மகளிர் ஐபிஎல் தொடரை கைப்பற்றிய நிலையில் ஆண்கள் அணி இன்னும் தடுமாறி வருகிறது. இந்த சீசனில் கூட விராட் கோலி சதம் அடித்தும் ஆர்சிபி அணி தோற்கும் நிலை ஏற்பட்டது.

IPL 2024 - Jamaican sprinter Yohan blake slams RCB For Poor Bowling

இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 197 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் ஆர் சி பி அணி மட்டமான பந்துவீச்சை வீசியதால் மும்பை அணி 15 புள்ளி மூன்று ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த நிலையில் ஆர் சி பி யின் மானம் இந்தியா மட்டுமல்லாமல், கடல் தாண்டியும் நாறிக் கொண்டிருக்கின்றது.

பிற விளையாட்டு வீரர்கள் கூட தற்போது ஆர்சிபிஐ கேலி செய்யும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஜமைக்காவை சேர்ந்த பிரபல ஒலிம்பிக் வீரர் யோகன் பிளாக் ஆர்சிபி அணியை கேலி செய்திருக்கிறார் .இது குறித்து பேசிய அவர், சூரியகுமார் யாதவ் எவ்வாறு பேட்டிங் செய்வார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் ஆர் சி பி நிச்சயமாக இது ஒரு மோசமான பந்துவீச்சு என்று யோகன் பிளாக் பதிவிட்டுள்ளார். ஓட்டப்பந்தய வீரராக இருந்தாலும் கிரிக்கெட்டை பின் தொடரும் யோகன் பிளாக் தன்னுடைய ஓய்வு நேரத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஏற்கனவே கிரிக்கெட்டில் தான் ஒரு அணியை வாங்க வேண்டும் என்று பிளாக் முன்பே கூறியிருந்தார்.

இது குறித்து முன்பே பதிவிட்டுள்ள அவர், நான் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஓட்டப்பந்தயத்தில் இருப்பேன். அதன் பிறகு எனக்கு கிரிக்கெட் தான் மிகவும் பிடிக்கும். நிச்சயமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நான் ஆடமாட்டேன். ஆனால் டி20 லீக் தொடரில் விளையாட ஆசைப்படுகிறேன். ஏன் ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியை வாங்க கூட எனக்கு ஆசை இருக்கிறது.

கே கே ஆர் இல்லை ஆர் சி பி அணியை வாங்க முயற்சி செய்வேன் என்று அவர் கூறியிருந்தார். அப்போது ஆர்சிபி அணி நீங்கள் வேகமாக ஓடும் அளவுக்கு பந்து வீசினால், எங்கள் அணியில் நிச்சயம் உங்களுக்கு இடம் இருக்கிறது என்று கூறி இருந்தது. இந்த கலந்துரையாடல் 2019 ஆம் ஆண்டு ட்விட்டரில் நடைபெற்றது. தற்போது ஆர்சிபி அணி மிகவும் மோசமாக பந்து வீசியதாக அதை யோஹன் பிளாக் சாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 12, 2024, 19:07 [IST]
Other articles published on Apr 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+