Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் மீது பொலார்ட் கோபம்.. அம்பானி குடும்பத்தை தாக்கி மறைமுக பதிவு.. என்ன தான் நடக்குது

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது பல பிரச்சினைகள் நிலவி வருகிறது. இதற்கு முதல் காரணம் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதுதான்.

ஐந்து கோப்பைகளை வென்று தந்த ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து அனுப்பிய மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது ஹர்திக் பாண்டியாவை அந்தப் பதவியில் அமர வைத்திருக்கிறது. இது மும்பை ரசிகர்களை மட்டும் அல்லாமல் அணி வீரர்களுக்கும் எரிச்சல் அடைய செய்திருக்கிறது.

IPL 2024 - Kieron Pollard takes an indirect dig at mumbai indians and rohit sharma

பும்ரா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் வெளிப்படையாகவே தங்களுடைய எதிர்ப்பை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியா ஏற்றுக்கொண்டாலும் அதற்கு இதுவரை ரோகித் சர்மா வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் தற்போது பேட்டிங் ஆலோசகராக இருக்கும் பொலார்டும் மும்பை அணியை மறைமுகமாக விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

அதில் மழை நின்ற பிறகு குடை கூட சுமையாக தெரியும். அதேபோல் நம்மால் ஆக வேண்டிய காரியம் முடிவடைந்த உடன் நம்மை தூக்கி எறிந்து விடுவார்கள் என்ற பொருள்பட விசுவாசம் முடிந்துவிடும் என்று பொலார்ட் கூறி இருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ரோகித் சர்மாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலே பொலார்ட் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வரை டி20 போட்டிகளில் பொலார்ட் விளையாடி வந்தாலும் ஐபிஎல்லில் மட்டும் தற்போது பயிற்சியாளராக பொலார்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார். மும்பை அணியில் நடைபெறும் அதிரடி மாற்றங்களை குறிப்பிட்டு இவ்வாறு பேசுகிறாரா என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இது மும்பை அணிக்கு ஆதரவாகவும் ரோகித் சர்மாவை விமர்சிக்கும் வகையில் போடப்பட்டிருக்கும் ஸ்டோரி என்றும் கூறி வருகின்றனர்.

கேப்டனாக இருந்து சலுகைகளை அனுபவித்து பின் பதவியில் இருந்து நீக்கப்பட்டவுடன் ரோகித் சர்மா விசுவாசத்தை மறந்து விட்டார் என்பதை தான் இது குறிக்கிறது என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மொத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எதுவுமே சரி இல்லை என்பது தான் இது காட்டுகிறது.

Story first published: Sunday, January 7, 2024, 14:25 [IST]
Other articles published on Jan 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+