Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL- உனக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடந்து இருக்கலாம் பா? 2 இந்திய விரர்களை வெளியே அனுப்பிய லக்னோ

மும்பை : ஐபிஎல் 2021 நான்காம் ஆண்டு சீசனில் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை வெளியிட நவம்பர் 26 ஆம் தேதி தான் கடைசி தேதி என பிசிசிஐ அறிவித்திருந்தது. இதனை அடுத்து ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துக் கொண்டிருந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தது.

அதேபோல் தங்களுக்கு தேவைப்படாத அல்லது குறைந்த பணத்தில் மீண்டும் ஏலத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று சில வீரர்களை விடுவித்து இருக்கிறது. பொதுவாக இதுபோன்று வீரர்கள் விடுவிக்கப்பட்டால் அவர்கள் சரியாக விளையாடவில்லை என்பதுதான் நேரடியான பொருள்.

IPL 2024 - LSG Released 2 Indian stars from the team

ஆனால் சில வீரர்கள் சிறப்பாக செயல்படும் அணி நிர்வாகம் தங்களுடைய யுக்திகளின் காரணமாக பல வீரர்களை விடுவித்து இருக்கிறது. அந்த வகையில் ஒருவர்தான் லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் உனாட்கட். கடந்த சீசனில் லக்னோ அணிக்காக சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார்.ஆனால் அவரை தக்கவைத்துக் கொள்ளாமல் லக்னோ அணி விடுவித்து இருக்கிறது.

பல திறமைகள் இருந்தும் போதிய வாய்ப்புகள் இல்லாததால் தடுமாறுவதாக குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் உனக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடந்திருக்கலாம் பா என்ற திரைப்பட வசனத்தை போட்டு ஆறுதல் கூறி வருகிறார்கள். இதே போன்று ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடித்த கருண் நாயர்க்கும் லக்னோ அணியில் இடமில்லை. அவரையும் லக்னோ அணி விடுவித்து இருக்கிறது.

இதேபோன்று மனன் வொஹ்ரா, சூர்யாநஸ் போன்ற வீரர்களையும் லக்னோ அணி விடுவித்துள்ளது இதேபோன்று வெளிநாட்டு வீரரான டானியல் சாம்சையும் லக்னோ அணி விடுவித்து இருக்கிறது. இதேபோன்று ஏலத்திற்கு முன்பான ட்ரான்ஸ்பர் இல் ராஜஸ்தான் அணியிடமிருந்து படிக்காலை லக்னோ அணி வாங்கியிருக்கிறது.

எனினும் தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக், வெஸ்ட் இண்டீஸ் நிக்கோலஸ் பூரான், மேயர்ஸ், ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோன்ஸ் இங்கிலாந்து வீரர் மார்க் வுட் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் ஆகியோரை லக்னோ அணி தக்கவைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 26, 2023, 22:46 [IST]
Other articles published on Nov 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+