For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிக்சர் போன பந்து! கடைசி நொடியில் கேட்ச் பிடித்த முஸ்தபிசுர்.. டக் அவுட்டான சூர்யகுமார்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் சூரிய குமார் அடித்த பந்தை சிக்ஸர் லைனில் அபாரமாக கேட்ச் பிடித்து முஸ்தஃபிசுர் ரஹ்மான் அசத்தியிருக்கிறார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ருதுராஜ் மற்றும் சிவம் துபே ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்க்க இறுதியில் தோனி ஹாட்ரிக் சிக்சர் அடித்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

IPL 2024 MI vs CSK - Brilliant catch from mustafizur rahman made suryakumar duck out

இதனை அடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷன் ஆகியோர் அதிரடியை காட்டினர். குறிப்பாக இசான் கிஷன் 15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்கள் சேர்த்து பதிரானா பந்துவீச்சில் வெளியேறினார்.

மறுபுறம் ரோகித் சர்மா அபாரமாக ஆடி அரை சதம் கடந்தார். இதனால் சி எஸ் கே அணிக்கு மும்பை இந்தியன்ஸ் கடும் சவால்களை கொடுத்தது. இந்த தருணத்தில் தான் சூரியகுமார் யாதவ், பேட்டிங் செய்ய வந்தார். கடந்த போட்டியில் சூரிய குமார் 19 பந்துகள் எல்லாம் அரை சதம் கடந்து விளையாடி வந்தார்.

இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் எவ்வளவு சீக்கிரம் ஆட்டம் இழக்கிறாரோ அவ்வளவு சிஎஸ்கே அணிக்கு நல்லது என்ற நிலை இருந்தது. இந்த சூழலில் தான் சூரியகுமார் யாதவ் தாம் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலே தூக்கி அடித்தார். அப்போது 6 லைனில் நின்று கொண்டிருந்த முஸ்தஃபீசுர் ரஹ்மான் பந்தை பிடிக்க முயன்ற போது தன்னுடைய பேலன்ஸை மிஸ் செய்தார்.

இதனால் நாம் சிக்சர் லைனில் கால் வைக்கப் போகிறோம் என்பதை உணர்ந்த முஸ்தஃபிசுர் ரஹ்மான் பந்தை தூக்கி எரிந்து மீண்டும் சிக்ஸர் லைனுக்கு உள்ளே வந்து கேட்சை பிடித்தார். இதன் மூலம் சூரியகுமார் யாதவ் டக் அவுட் ஆகி வெளியேறினார்.நடப்பு ஐபிஎல் தொடரிலே இது சிறந்த கேட்ச் ஆக இருக்கும் என்று ரசிகர்களும் கருந்துகின்றனர்.

Story first published: Sunday, April 14, 2024, 22:52 [IST]
Other articles published on Apr 14, 2024
English summary
IPL 2024 MI vs CSK - Brilliant catch from mustafizur rahman made suryakumar duck out சிக்சர் போன பந்து! கடைசி நொடியில் கேட்ச் பிடித்த முஸ்தபிசுர்.. டக் அவுட்டான சூர்யகுமார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+