Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்புட்றா.. ஹேர் டிரான்ஸ்பிளான்ட் செய்தாரா ரோகித் சர்மா? புதிய சர்ச்சையில் சிக்கிய ஹிட்மேன்!

மும்பை : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய ஹேர்ஸ்டைலுடன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது முதல் அவர் குறித்த விவாதம் சோசியல் மீடியாவில் அதிகரித்துள்ளது. மெகா ஏலம் நடக்கவுள்ளதையொட்டி ரோகித் சர்மாவை மும்பை அணி விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் டெல்லி, லக்னோ, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் ரோகித் சர்மாவை ட்ரேட் முறையில் வாங்க முயன்று வருவதாகவும் பேசப்பட்டு வருகின்றன.

IPL 2024 MI vs CSK Did Mumbai Player Rohit Sharma got a hair transplant Fans debated this as a big mystery in Social media

இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து இன்னொரு விவாதம் சோசியல் மீடியாவில் தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன் ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் தி கிரேட் இந்தியன் கபில் ஷோவில் கலந்து கொண்டனர். அதில் ரோகித் சர்மா ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தது வரவேற்பை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரோகித் சர்மா புதிய ஹேர்ஸ்டைலுடன் கலந்து கொண்டிருந்தார். இந்த புகைப்படங்கள் அதிகம் ட்ரெண்டாகிய நிலையில், ரோகித் சர்மா ஹேர் டிரான்ஸ்பிளான்ட் செய்துள்ளாரா அல்லது விக் வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்றாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். ஏனென்றால் ரோகித் சர்மாவுக்கு நீண்ட நாட்களாக முடி கொட்டும் பிரச்சனை இருந்து வருகிறது.

இதன் காரணமாகவே ரோகித் சர்மா சதம் விளாசினாலும் ஹெல்மெட்டை கழற்ற மாட்டார். அதேபோல் பொது வெளியிலும் ரோகித் சர்மா தோப்பி அணிந்தே காணப்படுவார். அதேபோல் சில நாட்களுக்கு முன் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்ட ஹோலி கொண்டாட்ட வீடியோவில் கூட ரோகித் சர்மாவுக்கு தலைமுடி இல்லாமல் இருந்தார்.

ஆனால் அடுத்த சில நாட்களில் ரோகித் சர்மாவின் ஹேர்ஸ்டைல் மொத்தமாக மாறியது எப்படி என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய கிரிக்கெட்டில் வீரர்கள் பலரும் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் செய்துள்ளனர். விராட் கோலி, சவுரவ் கங்குலி, சேவாக், ஹர்திக் பாண்டியா, கவுதம் கம்பீர் உள்ளிட்ட பலரும் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் செய்துள்ளனர். இந்த பட்டியலில் ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, April 10, 2024, 20:01 [IST]
Other articles published on Apr 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+