Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்வளவு திமிர் இருக்கும்.. பேட்டிங் மட்டும் ஆடினால் போதும்.. ரோகித்தை அவமானப்படுத்திய ஹர்திக்!

மும்பை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியில் அனுபவ வீரர் முகமது நபி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் நமன் திர் சேர்க்கப்பட்டுள்ளார்.

IPL 2024 MI vs KKR Rohit Sharma name is in the impact players list of Mumbai Indians against KKR at Wankhede

இந்த நிலையில் மும்பை அணியின் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக ரோகித் சர்மாவின் பெயர் இம்பேக்ட் பிளேயர்களுக்கான பட்டியலில் உள்ளது. இது ரோகித் சர்மா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மும்பை அணிக்காக 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ள ரோகித் சர்மாவின் அனுபவம் தேவையில்லை என்று ஹர்திக் பாண்டியா முடிவு செய்துள்ளார்.

கடந்த சில போட்டிகளாக மும்பை அணி திணறிய போது, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மோசமாக இருந்தது. சில போட்டிகளில் மும்பை அணியின் தோல்விக்கும் ஹர்திக் பாண்டியாவின் முடிவுகள் காரணமாகின. இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு உதவியாக அனுபவம் மூலம் ரோகித் சர்மா கேப்டன்சியில் உதவி செய்து வந்தார்.

தற்போது ரோகித் சர்மா இல்லாமலேயே மும்பை அணி பவுலிங்கை மேற்கொள்ள உள்ளது. ஏற்கனவே மும்பை அணி மற்றும் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது ரோகித் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக சேர்த்ததன் மூலமாக கூடுதல் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவின் அனுபவத்தையே ஹர்திக் பாண்டியா வேண்டுமென்று முடிவு செய்துள்ளார். அதேபோல் பவுண்டரி லைனில் ரோகித் சர்மாவின் ஃபீல்டிங் மோசமாக இருந்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Friday, May 3, 2024, 19:40 [IST]
Other articles published on May 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+