Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

120 ரன்களில் சுருண்ட மும்பை இந்தியன்ஸ்..ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் கிளாஸ் பவுலிங்..ஹர்திக் பாவம்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் தடுமாறியது. ஐபிஎல் 17வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய சொந்த மண்ணில் முதல் ஆட்டத்தை விளையாடியது.

கேப்டன் ஹர்திக் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்த நிலையில் சொந்த மண்ணில் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

IPL 2024 - Mumbai indians scored only 125 runs vs Rajasthan royals

இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா பவுல்ட் ஓவரில் தாம் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். இதேபோன்று அடுத்த பந்துக்காக மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதை அடுத்து ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் தென்னாபிரிக்கா வீரர் டிவால்ட் பிரவீஸ் பவுல்ட் ஓவரில் கோல்டன் டக் ஆனார்.

பற்றாத துறைக்கு அதிரடி வீரர் இஸான் கிஷனும் பர்கர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் அடுத்து கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆட ரன்கள் கொஞ்சம் வந்தது. 21 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஆறு பவுண்டரிகள் சேர்த்து 34 ரன்கள் எடுத்த நிலையில் சாகல் பந்துவீச்சு தூக்கி அடித்து கேட்ச் ஆனார்.

இதேபோன்று திலக் வர்மாவும் சாஹல் பந்து வீச்சில் அஸ்வினின் அபார கேட்சில் பெவிலியன் திரும்பினார். இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 95 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட் இழந்து தடுமாறியது. இதை அடுத்து களத்திற்கு வந்த டீம் டேவிட் ஆவது மும்பையை கௌரவமான இலக்குக்கு கொண்டு செல்வார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

17 ரன்களிலும் ஜெரால்டு கோயிட்சே நான்கு ரன்களில் வெளியேற 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தரப்பில் சாகல், டிரண்ட் பவுல்ட் தலா மூன்று விக்கெட்டுகளும் பர்கர் இரண்டு விக்கெட்டுகளையும் ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

Story first published: Monday, April 1, 2024, 21:47 [IST]
Other articles published on Apr 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+