Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் அணியில் 3 கோல்டன் டக்.. ராஜஸ்தான் பவுலர் டிரெண்ட் பவுல்ட் வெறித்தன பவுலிங்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் வரிசையில் மூன்று வீரர்கள் அனைவரும் கோல்டன் டக் ஆகி வெளியே இருப்பது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சொந்த மண்ணில் தங்களுடைய முதல் போட்டியில் களமிறங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

IPL 2024 - Mumbai indians Top 3 Batters out for Golden duck in Trent boult over

இதனை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரராக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, இசான் கிசன் ஆகியோர் களமிறங்கினர். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, சொந்த மண்ணில் அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுக்கும் விதமாக அவர் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் அவருடைய ஆக்ரோஷமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதைப் போன்று அடுத்த பந்தலியே இளம் வீரர் நமன் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதன் மூலம் மும்பை அணி ஒரு ரன் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட் இழந்து தடுமாறியது.

இதனை எடுத்து இஷான் கிஷன் கொஞ்சம் அதிரடி காட்ட முற்பட்டார். ஆனால் அவரும் பர்கர் பந்துவீச்சில் வெளியேறினார். டூவல் பிரைவேட் களமிறங்கினார். அப்போது மீண்டும் தன்னுடைய இரண்டாவது ஓவரை வீச வந்த பவுல்ட் அபாரமாக பந்துவீசி வீசி கோல்டன் டக் ஆக்கினார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கடந்த மெகா ஏலத்தின் போது ட்ரெண்ட் பவுல்ட் வேண்டாம் என்றும் அதற்கு பதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜோப்ரா ஆர்ச்சரை சேர்த்துக் கொள்ளலாம் என்று மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு எடுத்தது, அந்த முடிவு தற்போது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது. ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில், ட்ரெண்ட் பவுல்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்து வருகிறார். இது மும்பை எடுத்த தவறான முடிவாக பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, April 1, 2024, 20:43 [IST]
Other articles published on Apr 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+