IPL 2024 : மும்பை இந்தியன்ஸில் வெடித்த விரிசல்.. பாண்டியாவுக்கு எதிராக இளம் வீரர்கள் செய்த செயல்
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராகவும், ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாகவும் மூன்று இளம் வீரர்கள் மாறி இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
2024 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் பத்து ஆண்டு கால கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதில் மும்பை இன்சியன்ஸ் அணியில் பலருக்கு உடன்பாடு இல்லை என செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
குறிப்பாக இந்த கேப்டன்சி மாற்றத்தில் நடந்த சில நிகழ்வுகள் ரோஹித் சர்மா மனதை காயப்படுத்தி விட்டதாக கூறப்பட்டது. இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த பிரச்னையும் இல்லை என்பதைப் போலவே அந்த அணி சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தது.

ஆனால், ரோஹித் சர்மாவுடன், ஹர்திக் பாண்டியா இதுவரை பேசவில்லை. அதை ஹர்திக் பாண்டியாவே கூறினார். மறுபுறம் அந்த அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான பும்ரா அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்கப் போவதில்லை எனவும், முதல் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னதாக போட்டி நடைபெற உள்ள அகமதாபாத் மைதானத்துக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரிய விரிசல் இருப்பதற்கான முதற்கட்ட நிகழ்வுகளாக இவை பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த அணியில் இடம் பெற்றுள்ள விஷ்ணு வினோத், குமார் கார்த்திகேயா மற்றும் ஆகாஷ் மத்வால் ஆகிய இளம் வீரர்கள் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் முதல் நாள் பயிற்சிக்கு வந்த வீடியோவை தங்கள் சமூக ஊடகங்களில் ஒரே நேரத்தில் பகிர்ந்து இருக்கின்றனர்.
சாதாரணமான நேரத்தில் இதை பகிர்ந்து இருந்தால் யாரும் அதை சர்ச்சையான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள். ஆனால், அணியில் விரிசல் இருப்பதாக கூறப்படும் நிலையில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மாவின் வீடியோவை ஒரே நேரத்தில் அவர்கள் பகிர்ந்து இருப்பதன் மூலம் தாங்கள் ரோஹித் சர்மாவின் பக்கம் இருக்கிறோம் என சொல்லாமல் சொல்கிறார்களோ? என்ற கேள்வியை எழுப்புகிறது.


Click it and Unblock the Notifications