Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 - முதல் 4 இடங்களை பிடிக்க போகும் அணிகள் எது? பிளே ஆப் சுற்றுக்கு நுழைய போவது யார்?

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல போவது யார் என்பதை தற்போது பார்க்கலாம். ஐபிஎல் தொடர் லீக் சுற்று வரும் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 70 லீக் ஆட்டம் இந்த தொடரில் நடைபெறுகிறது. தற்போது 46 லீக் ஆட்டம் முடிவடைந்து 47 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, டெல்லி விளையாட போகிறது.

இந்த நிலையில் இன்னும் 23 ஆட்டங்களில் லீக் சுற்றில் எஞ்சி இருக்கிறது. தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

IPL 2024 Playoffs- Which four Team will Play in playoff


ஐபிஎல் புள்ளி பட்டியலில் தற்போது ராஜஸ்தான அணி 9 போட்டிகள் விளையாடி 16 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. இதனால் ராஜஸ்தான் அணி ஏறக்குறைய பிளே ஆப் சுற்றுக்கு சென்று விட்டது என்று நம் கருதிக் கொள்ளலாம். இந்த நிலையில் இரண்டாவது இடத்தில் கே கே ஆர் அணி இருக்கிறது.

இவர்கள் எட்டு போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி மூன்று தோல்வி என 10 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். இதனால் கே கே ஆர் அணி இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடலாம். இதனால் கொல்கத்தா அணிக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாகத்தான் தெரிகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, நான்கு தோல்வி என பத்து புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். சிஎஸ்கே அணி இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற ஆக வேண்டும். இதில் இரண்டு போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதனால் சிஎஸ்கே அணியும் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது. நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது. அவர்கள் ஒன்பது போட்டிகளில் விளையாடி 5 வெற்றி 10 புள்ளிகள் உடன் உள்ளனர். தற்போது ஐந்தாம் இடத்தில் லக்னோ அணியும் 10 புள்ளிகளுடன் இருக்கிறது. ஆறாம் இடத்தில் டெல்லி அணியும் 10 புள்ளிகளுடன் உள்ளது.

இந்த சூழலில் இந்த ஆறு அணிகள் இடையே தான் பிளே ஆப் சுற்றுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ராஜஸ்தான், கே கே ஆர், சி எஸ் கே மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும். நான்காவது அணி தான் எது என்பதில் கடும் போட்டி இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். பிளே ஆப் சுற்றுக்கு எந்த அணி செல்லும் என்பதை நீங்கள் கமெண்டில் தெரிவியுங்கள்.

Story first published: Monday, April 29, 2024, 19:04 [IST]
Other articles published on Apr 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+