Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Points table - வாங்க மாம்ஸ் கீழே போவோம். . சிஎஸ்கேக்கு மறைமுக ஆப்பு வைத்த மும்பை இந்தியன்ஸ்

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் புள்ளி பட்டியலில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் தற்போதைய சீசனில் லக்னோ மற்றும் கே கே ஆர் அணிகளை தவிர மற்ற அணிகள் அனைவரும் மூன்று போட்டிகளை விளையாடிவிட்டார்கள்.

இதன் அடிப்படையில் தற்போது புள்ளி பட்டியலில் திகழ்ந்த மாற்றங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலுமே தோல்வியை தழுவி இருக்கிறது.

IPL 2024 Points table - RR Placed as No 1 team and disadvantage for csk

இதனால் ஒரு புள்ளி கூட பெறாமல் அவர்கள் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். மும்பை அணி தோல்வியை தழுவி இருப்பது சிஎஸ்கே அணிக்கு மறைமுக சரிவை ஏற்படுத்திருக்கிறது. ஏனென்றால் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் 6 புள்ளிகள் பெற்றதால் அந்த அணி முதல் இடத்திலும், நான்கு புள்ளிகளை பெற்றுள்ள கேகேஆர் அணி இரண்டாம் இடத்திலும், சிஎஸ்கே மூன்றாவது இடத்திற்கும் சரிந்துள்ளது.

அந்த வகையில் குஜராத் அணி தற்போது 4 புள்ளிகள் உடன் மைனஸ் ரன் ரேட்டில் நான்காம் இடத்தில் இருக்கிறது. இதேபோன்று முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி இரண்டு தோல்வி என இரண்டு புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. லக்னோ அணி இரண்டு புள்ளிகள் உடன் ஆறாவது இடத்திலும், டெல்லி பஞ்சாப் பெங்களூரு ஆகிய அணிகள் முறையே 7, 8 மற்றும் 9 ஆவது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ஆர் சி பி அணியும் லக்னோ அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் ஆர் சி பி வெற்றி பெற்றால் அவர்கள் ஐந்தாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை லக்னோ அணி வெற்றி பெற்றால் அவர்கள் நான்காவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே அணி இனி வெள்ளிக்கிழமை சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Story first published: Tuesday, April 2, 2024, 0:01 [IST]
Other articles published on Apr 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+