IPL - யாருய்யா இவன்? 11 வீரர்களை வெளியேற்றிய ஆர்சிபி.. உலக சாம்பியனையும் வீட்டுக்கு அனுப்பியது
அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு அணிகளும் பல்வேறு யுத்திகளை கடைப்பிடித்து வருகிறது.
அதில் ஆர்சிபி அணி கடைபிடித்து இருக்கும் யுத்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் எந்த வீரர்களை விடுவிக்கப் போகிறோம் என்பது குறித்து ஒவ்வொரு அணியும் பட்டியலை பிசிசிஐ இடம் அனுப்பி இருந்தது.

அந்த வகையில் ஆர்சிபி அணி தங்களது அணியில் இருந்து 11 வீரர்களை கழற்றி விட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் மினி ஏலத்தில் 40 கோடி ரூபாய்க்கு மேல் ஆர் சி பி வைத்திருக்கிறது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருப்பவர் இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் ஹசரங்கா. ஹசரங்கா காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடவில்லை.
இருப்பினும் சுழற்பந்து வீச்சு பேட்டிங் என சிறந்து விளங்கிய வீரராக அவர் தான் இருந்தார்.இதே போன்று வேகம் குறைவாக பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுக்கும் ஹர்ஷல் பட்டேலும் ஆர்சிபி அணி துரத்திவிட்டது. இதேபோன்று உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட்டுக்கும் rcb டாடா காட்டிவிட்டது. நியூசிலாந்து வீரர் பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோருக்கும் ஆர்சிபி அணி டாடா காட்டிவிட்டது.
அண்மையில் இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வில்லி ஆர்சிபி அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் பார்னல் ஆர் சி பி அணியால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று வேகபந்துவீச்சாளர் சித்தார்த் கவுல் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் ஆகியோரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
சோனு யாதவ், அவிநாஸ் சிங் ஆகிய இரண்டு அறியப்படாத இந்திய வீரர்களும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ஆர்.சி.பி வெளிய அனுப்பிய 11 வீரர்களை வைத்து ஒரு அணியையே உருவாக்கி விடலாம் என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள். ஆர் சி பி அணி ஏற்கனவே ஷாபாஸ் அகமதை ஹைதராபாத் அணிக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்து மாயங் தாகர் என்ற வீரரை டிரான்ஸ்பர் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, November 26, 2023, 19:30 [IST]
Other articles published on Nov 26, 2023


Click it and Unblock the Notifications