Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Rohit sharma - உங்க சாப்டர் குளோஸ்.. அம்பானியின் ஈகோவை டச் செய்த ரசிகர்கள்.. மும்பை அதிரடி முடிவு

மும்பை : ஐபிஎல் 2024 ஆண்டு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருப்பதை ரசிகர்களை எதிர்பார்க்கவில்லை. ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனால் ரோஹித் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை கடுமையாக கிண்டல் செய்து அவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சமூக வலைத்தளத்தில் மும்பை இந்தியன்ஸ் எதிராக பல எதிர்மறையான கருத்துக்களையும் டேக்குகளையும் ட்ரெண்ட் செய்தனர்.

IPL 2024 - Rohit sharma mumbai indians captaincy closed as they moved to another star

மேலும் சமூக வலைத்தளத்தில் மும்பை இந்தியன்ஸ் பின் தொடர்வதை நிறுத்தி அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தனர். இது அம்பானி குடும்பத்தை கடுப்படைய செய்திருக்கிறது. மேலும் இது குறித்து ரோகித் சர்மாவும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதால் இது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தை மேலும் டென்ஷன் ஆக்கியது.

இந்த நிலையில் அவர்கள் ஒரு புதிய முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஹர்திக் பாண்டியா காயம் அடைந்து இருப்பதால் அவரால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியுமா முடியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை வைத்து ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்தார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி செய்ததற்கு நல்ல பலனை அனுபவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

இதனால் கடுப்பான அம்பானி குடும்பம் தற்போது யாருமே எதிர்பாராத ஒரு டிஸ்டை வைத்திருக்கிறது. அதன்படி ஹர்திக் பாண்டியாவுக்கு ஒருவேளை காயம் ஏற்பட்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனால் சூரியகுமார் யாதவ் கேப்டனாக கொண்டுவர முடிவெடுத்திருக்கிறார்கள். சூரியகுமார் யாதவ் அண்மையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் ஆகவும் பேட்ஸ்மேன் ஆகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

இதனால் ரோகித் சர்மாவுக்கு நல்ல மாற்றாக சூரியகுமார் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஹர்திக் இல்லை என்றாலும் கூட ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சியை கொடுக்காமல் சூரியக்குமாரியாதவை வைத்து ஹரிதிக் வரும் வரை தொடரை ஓட்டு விடலாம் என்ற முடிவை மும்பை அணி நிர்வாகம் எடுத்து இருக்கிறது. இதனை கொஞ்சம் கூட ரோஹித் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

Story first published: Tuesday, January 2, 2024, 21:56 [IST]
Other articles published on Jan 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+