மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தொடரை விட்டு வெளியேறிய முதல் அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிதான். தற்போது சிஎஸ்கேவும் பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது ரசிகர்கள் சோகமாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமூக வலைத்தளத்தில் கடும் கோபத்துடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா அபிஷேக் நாயுருடன் மைதானத்தில் பேசினார் அப்போது அதனை வீடியோ எடுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை செய்தது. இதுதான் தற்போது ரோகித் சர்மாவின் கோபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது. இது குறித்து ரோகித் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது உள்ள சூழலில் கிரிக்கெட் வீரர்கள் வாழ்க்கை மிகவும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. கிரிக்கெட் வீரர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கேமராக்கள் பின் தொடர்ந்து இருக்கின்றன. எங்களுக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன், சக வீரர்களுடன் பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கும்.
பயிற்சியின் போதும், போட்டி நடைபெறும் போதும் நாங்கள் பல விஷயங்களை பேசிக்கொள்வோம். ஆனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் என் பேச்சை மீறியும் நான் பேசியதை ரெக்கார்ட் செய்து இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் அதனை நேரலையும் செய்திருக்கிறார்கள். இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தின் அத்துமீறலாக நான் கருதுகிறேன்.
அனைத்தையும் விரைவாகவும் நான் மட்டும்தான் போட வேண்டும் என்று தொலைக்காட்சி ஊழியர்கள் செய்கிறார்கள். இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற அவர்கள் விரும்புகிறார்கள். இதே முறை தொடர்ந்து நடந்தால் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆகிய மூன்றுக்கும் இருக்கும் நம்பிக்கை பாதிக்கப்படும். தயவு செய்து அறிவை பயன்படுத்துங்கள் என்று ரோகித் சர்மா காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.