Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs DC -கடைசி ஓவரில் 32 ரன்கள்.. 4 சிக்சர்! டெல்லியை பொளந்த மும்பை அணியின் ரோமாரியோ ஷெபர்ட்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய வீரர் ரோமாரியோ செபர்ட் கடைசி ஓவரில் மட்டும் 32 ரன்களை விளாசி டெல்லி அணியில் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். டாஸ் வென்று முதலில் டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, இசான் கிஷன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவும் டக் அவுட் ஆக மும்பை அணி சரிவை சந்திக்க தொடங்கியது.

IPL 2024 - Romario sheperd hits 32 runs in last six balls powers MI into mammoth score

ஒரு கட்டத்தில் 200 ரன்களை எடுக்குமா என்ற இக்கட்டான நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. அப்போது கடைசி கட்டத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த ரொமாரியோ செபர்ட் அபாரமாக விளையாடி டெல்லி அணியின் பந்துவீச்சை பொளந்தார். குறிப்பாக கடைசி ஓவரை டெல்லி அணியின் நோக்கியா வீசினார்.

கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய ரொமாரியோ செஃபர்ட் அடுத்த மூன்று பந்துகளிலும் சிக்ஸர்களை விரட்டினார். 19.2 வது வரை லாங் ஆன் திசை நோக்கி அபாரமாக சிக்ஸர் அடித்தார். 19.3 வது ஓவரை கொஞ்சம் நகர்ந்து டீப் ஸ்கொயர் திசையில் அவர் அடித்த சிக்ஸரால் பந்து மைதானத்தை விட்டு வெளியேறியது.

இதனை கொஞ்சம் கூட நம்பாத மும்பை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினர். ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த ஹர்திக் பாண்டியா உற்சாக மிகுதியில் சூரியகுமார் யாதவ் கையை தட்டி கொண்டாடினார். 19.4 வது ஓவரில் டீப் கவர் திசையில் ரொமாரியோ 6 அடித்தார். 19.5 பந்தில் பவுண்டரி அடித்த நிலையில் கடைசி பந்தில் மீண்டும் சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என 32 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி அடித்து இருக்கிறது.

கடைசி 8 பந்தில் மும்பை அணி 42 ரன்கள் சேர்த்து இருக்கிறது. ரொமரியோ செபர்ட், ஆர் சி பி அணியில் இருந்த நிலையில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தவுடன் மீண்டும் பொளந்து கட்டி இருப்பது ஆர்சிபி ரசிகர்களை சோகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். கடைசி 8 பந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றி இருக்கிறது. பத்து பந்துகளை எதிர் கொண்ட ரொமாரியோ 39 ரன்கள் விளாசி இருக்கிறார்.

Story first published: Sunday, April 7, 2024, 17:38 [IST]
Other articles published on Apr 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+