For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சஞ்சு சாம்சன் இல்லை என்றால் இந்தியாவுக்கு தான் நஷ்டம்! ரோகித்,கோலிக்கு மட்டும் ஒரு நியாயமா?- கம்பீர்

மும்பை : டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இல்லை என்றால் அது இந்தியாவுக்கு தான் நஷ்டம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் திறமை வாய்ந்த வீரராக சஞ்சு சாம்சன் இருந்தாலும் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் சஞ்சு சாம்சன், ஐபிஎல் போன்ற பல்வேறு தொடர்களில் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். நடப்பு சீசனில் கூட விக்கெட் கீப்பர்களின் சஞ்சு சாம்சன் தான் அதிக ரன்கள் எடுத்திருக்கிறார்.

IPL 2024 - Sanju samson should be backed by team india says Gautam gambhir

9 போட்டிகளில் விளையாடிய சாம்சன் 385 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சஞ்சு சாம்சம் சராசரியாக 75 ரன்கள் ஆகும். இதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 82 ரன்கள் ஆகும். அண்மையில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதனால் சஞ்சு சாம்சன் தான் அணியில் சேர்க்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கௌதம் கம்பீர், டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என தெரிவித்தார். சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றால் அது சஞ்சு சாம்சனுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் இந்தியாவுக்கு தான் அது பெரும் நஷ்டம் என்றும் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பிசிசிஐ வழங்கிய ஆதரவு போல் சந்து சாம்சனுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சாம்சனுக்கு போதிய ஆதரவை வழங்கி இருந்தால் இந்நேரம், அவர் உலக நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக திகழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார். தாம் தேர்வு குழு உறுப்பினராக இருந்தால், சஞ்சு சாம்சனை பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது இடத்தில் விளையாட வைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். சஞ்சு சாம்சனுக்கு துரதிஷ்டவசமாக போதிய ஆதரவு கிடைக்கப்படவில்லை என்று கௌதம் கம்பீர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Story first published: Monday, April 29, 2024, 21:49 [IST]
Other articles published on Apr 29, 2024
English summary
IPL 2024 - Sanju samson should be backed by team india says Gautam gambhir சஞ்சு சாம்சன் இல்லை என்றால் இந்தியாவுக்கு தான் நஷ்டம்! ரோகித்,கோலிக்கு மட்டும் ஒரு நியாயமா?- கம்பீர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+