Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் அதிரடிக்கு யுவராஜ், பிரைன் லாரா தான் காரணம்.. சாதனை வீரன் அபிஷேக் சர்மா கருத்து

ஐதராபாத் : ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி புதிய உலக சாதனை படைத்து இருக்கிறது. 166 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 9.4 ஓவர்கள் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார். இதில் எட்டு பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார்.

IPL 2024 SRH vs LSG- Abhishek sharma gives credits yuvraj and brain lara for his batting

இதில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும். இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா, நடப்பு ஐபிஎல் தொடரில் 400 ரன்களுக்கு மேல் குவித்து ஸ்ட்ரைக் ரேட் 200க்கு மேல் வைத்து இருக்கிறார். இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளர்களிடம் பேசிய அபிஷேக் ஷர்மா, என் மீது நம்பிக்கை வைத்த சன்ரைசர்ஸ் அணிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பேசிய அவர், தற்போது சூழல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. இதனால் இந்த போட்டியை நான் மகிழ்ச்சியோடு அனுபவித்து விளையாடுகிறேன். டிராவிஸ் ஹெட்டுக்கு தான் அனைத்து பாராட்டுகளும் சேர வேண்டும். ஏனென்றால் அவர் எப்போதுமே பேட்டிங் தொடர்ந்தால் முதல் இரண்டு அல்லது மூன்று பந்துகள் பவுண்டரி நோக்கி செல்லும்.

நான் அதிரடியாக ஆட வேண்டும் என்று நினைத்தெல்லாம் விளையாடியது கிடையாது .பந்துக்கு ஏற்ற வகையில் நான் ரன்கள் சேர்ப்பேன். பவுலர்கள் எங்களிடம் பேசும் போது ஆடுகளம் பேட்டிங் சாதகமாக மாறி வருகிறது என்று கூறினார்கள். எனினும் நானும் டிராவிஸ் ஹெட் ஆடுகளத்தை பற்றி எல்லாம் யோசித்து விளையாடுவது கிடையாது.

லக்னோ அணி குறைந்த இலக்கு நிர்ணயித்திருக்கிறது என்று தெரியும். எனவே விரைவில் அதனை துரத்துவதன் மூலம் ரன் ரேட் அதிகமாகும் என்று நினைத்தோம். ஐபிஎல் தொடருக்கு முன்பு நான் கடின உழைப்பை மேற்கொண்டேன். அது தற்போது எனக்கு வெற்றியை கொடுக்கின்றது. என்னுடைய இந்த வெற்றிக்கு யுவராஜ் சிங்கும், கிரிக்கெட் வீரர் பிரைன் லாராவும் தான் காரணம். என்னுடைய தந்தை தான் என்னுடைய முதல் பயிற்சியாளர் அவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அபிஷேக் ஷர்மா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, May 8, 2024, 23:56 [IST]
Other articles published on May 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+