For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐதராபாத் சாதனையால் ஆர்சிபியை பொளக்கும் ரசிகர்கள்.. வெளுக்கப்படும் ஹர்திக்.. தெறிக்கும் மீம்ஸ்!

ஐதராபாத் " மும்பை - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2024 SRH vs MI Fantastic Memes from Social Media after SRH won by 31 runs against Mumbai Indians at Hyderabad

"உனக்காக எல்லாம் உனக்காக" படத்தில் ரம்பாவை பார்க்க செல்லும் நடிகர் கார்த்தியும், கவுண்டமணியும் எதிர் ஊர்க்காரர்களிடம் சிக்கி கொள்வார்கள். அப்போது கவுண்டமணி மாற்றிக் கொண்ட போது, காப்பாற்ற அழைப்பார். அதனை பார்த்து கார்த்தி, சிரித்து கொண்டே எஸ்கேப் ஆகிவிடுவார். அதனை போல், நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ருத்ரதாண்டவம் ஆடியது. இதனை மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவை கவுண்டமணியாகவும், கார்த்திக்காக ரோகித் சர்மாவும் மாற்றி, ஹர்திக் பாண்டியா, " என்ன மாப்பிள்ளை.. சிரிக்கிற" என்று கேட்பதாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IPL 2024 SRH vs MI Fantastic Memes from Social Media after SRH won by 31 runs against Mumbai Indians at Hyderabad

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதனை தீப்பொறி திருமுகம் காமெடியில், தீப்பொறி திருமுகம் பார்த்து குடிசை பற்றிக்கொண்டது என்று சிங்கமுத்து கோர்த்துவிடுவார். இதனால் டென்ஷனாகும் வீட்டுக்கார பெண், வடிவேலுவை வேட்டியை அவிழ்த்து பொளந்துவிடுவார். இதனை அப்படியே வடிவேலுவாக ஹர்திக் பாண்டியாவையும், வீட்டுக்கார பெண்ணாக நீடா அம்பானியையும் மாற்றி, ஹர்திக் பாண்டியாவை நீடா அம்பானி பொளந்து கட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

IPL 2024 SRH vs MI Fantastic Memes from Social Media after SRH won by 31 runs against Mumbai Indians at Hyderabad

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்களை விளாசினார். இதனை போக்கிரி படத்தில், நேத்து வந்த பச்சா நீ.. எங்களையே போட்டுருவியா.. என்று வில்லன் விஜய் சட்டையை பிடித்து கேட்க, திடீரென விஜய் துப்பாக்கியால் சுட்டு, எப்போ வரோம்னு முக்கியம் இல்ல.. புல்லட் எப்படி இறங்குதுன்றது தான் முக்கியம் என்பார். அதனை அப்படியே வில்லனாக மும்பை பவுலர்களையும், விஜயாக அபிஷேக் சர்மாவையும் மாற்றி, "எப்போ வரோம்னு முக்கியம் இல்ல.. பால் எப்படி ரசிகர்களிடம் பறக்க விடுறோம்ன்றதுல தான் இருக்கு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல் ரகம்.

IPL 2024 SRH vs MI Fantastic Memes from Social Media after SRH won by 31 runs against Mumbai Indians at Hyderabad

திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் வருமான வரித்துறையிடம் தனுஷ் மாட்டிக்கொண்ட போது, பிரகாஷ்ராஜை கோர்த்துவிடுவார். அதுபோல் மும்பை அணியின் தோல்வி உறுதியான போதும், ஹர்திக் பாண்டியா பொல்லார்ட் உடன் சிரித்து கொண்டே ஜாலியாக இருப்பார். அதற்கு மும்பை அணி தோற்க போகும் சூழலில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டே இருக்கியே என்று கேட்க, "எதுவாக இருந்தாலும் என் பாஸை கேட்டுக்கோங்க" என்று ரோகித் சர்மாவின் பழைய பேச்சின் புகைப்படத்தை பதிவிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் தரமான காமெடி.

IPL 2024 SRH vs MI Fantastic Memes from Social Media after SRH won by 31 runs against Mumbai Indians at Hyderabad

நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து ஆர்சிபி அணி சாதனையை முறியடித்தது. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் பலரும் சோகமடைந்தனர். இதனை மயில்சாமியின் டாக்டர் காமெடியை வைத்து மாற்றி, ஐயயோ.. அதிகபட்ச ஸ்கோர் ரெக்கார்ட் போச்சே.. என்று ஃபீல் செய்வது போலவும், அதற்கு மற்ற அணி ரசிகர்கள் அதான் 49 ரன்கள் ரெக்கார்ட் இருக்குல என்று கூறி கிண்டல் செய்வதாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் ஃபன் ரகம்.

Story first published: Thursday, March 28, 2024, 10:48 [IST]
Other articles published on Mar 28, 2024
English summary
IPL 2024 SRH vs MI : Fantastic Memes from Social Media after SRH won by 31 runs against Mumbai Indians at Hyderabad
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+