Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு லாபம்.. கவாஸ்கர் அதிரடி

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டது குறித்து முதல் முறையாக பேசி இருக்கிறார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். அவர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசுவார் என ரோஹித் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக மும்பை இந்தியன்ஸ் அணி செய்தது சரிதான் எனக் கூறி இருக்கிறார்.

2024 ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவினார் ஹர்திக் பாண்டியா. அதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை பறித்து, அணி மாறி வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு அளித்தது. இது தவறு என்ற விமர்சனம் எழுந்த நிலையில், சிலர் மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணியின் எதிர்காலத்தை கருதி இதை செய்துள்ளது எனக் கூறி இருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

 IPL 2024 : Sunil Gavaskar says removing Rohit Sharma from captaincy will help Mumbai Indians

மேலும், ரோஹித் சர்மாவுக்கு தற்போது 36 வயது ஆகிவிட்டது என்றும், அவர் ஒருநாள் அணி, டி20 அணி டெஸ்ட் அணி என மூன்று வித இந்திய அணிகளுக்கும் கேப்டனாக இருக்கிறார். அதனால் அவர் கடும் அழுத்தத்தில் இருக்கிறார். அதனால், அவர் பேட்டிங் ஃபார்ம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அவர் கேப்டன் பதவியை விட்டு நீக்கப்பட்டதன் மூலம் நன்றாக பேட்டிங் செய்ய முடியும். அதனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு லாபம் தான் எனவும் கூறி இருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

இது பற்றி சுனில் கவாஸ்கர் பேசியது - "மும்பை இந்தியன்ஸ் எப்போதுமே தங்கள் அணியின் எதிர்காலத்தைப் பற்றியே யோசித்திருக்கிறார்கள். ரோஹித் சர்மாவுக்கு ஏற்கனவே 36 வயதாகிறது, மேலும் மூன்று வடிவங்களுக்கும் இந்திய அணியின் கேப்டனாக இருப்பதால் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார். அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி அந்தச் சுமையைக் குறைத்து அந்த பொறுப்பை ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுத்து இருக்கிறார்கள்."

"ஹர்திக்கை கேப்டன் பதவியில் அமர வைத்து இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும். அவர்கள் இப்போது ரோஹித்துக்கு டாப் ஆர்டரில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள சுதந்திரம் கொடுத்துள்ளனர். ஹர்திக் நம்பர் 3 அல்லது நம்பர் 5 இல் பேட்டிங் செய்ய வந்து அந்த அணிக்கு உதவுவார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 200-க்கும் மேற்பட்ட ரன்களை தொடர்ந்து பதிவு செய்ய முடியும்" என்று கவாஸ்கர் கூறினார்.

Story first published: Wednesday, February 14, 2024, 13:56 [IST]
Other articles published on Feb 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+