Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் உடல் தகுதி என்ன ஆச்சு.. ஐபிஎல், டி20 உலககோப்பை வேறு வருதே.. மும்பை இந்தியன்ஸ்க்கு ஆப்பா?

Suryakumar yadav : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது கடைசி பகுதியை எதிர்நோக்கி இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி வென்று விட்டதால் சமீபிரதாய ஆட்டமாக தான் கடைசி போட்டி இருக்கும். எனினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையும்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்களின் கவனம் முழுவதும் தற்போது டி20 நோக்கி சென்று விட்டது. ஏனென்றால் ஐபிஎல் டி20 உலக கோப்பை என அடுத்த மூன்று மாதங்களுக்கு ரசிகர்களுக்கு திருவிழா தான்.

IPL 2024 - suryakumar yadav released video about his injury update

இதனால் ஐபிஎல் தொடர்பான அப்டேட்ஸ் ஒவ்வொருவரும் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என வெறிகொண்டு திரிகிறது. கேப்டன் ரோகித் சர்மா மாற்றப்பட்டது அந்த அணியில் பெரிய விரிசலை ஏற்படுத்திருக்கிறது.

இந்த நிலையில் மும்பை அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அது சூரிய குமார் யாதவ் கையில் தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சூரிய குமார் யாதவ் காலில் இருக்கிறது. அந்த அணியின் முக்கிய வீரரான சூரியகுமார் யாதவ், கடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது காயம் அடைந்தார்.
அவருடைய காயம் பெரிய அளவில் இருந்ததால் அவர் குணமடைவதற்கு ஜெர்மனியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக ஓய்வில் இருந்த சூரிய குமார் யாதவ் தற்போது தன்னுடைய உடல் தகுதி குறித்து அப்டேட் வெளியிட்டு இருக்கிறார். அதில் சூரிய குமார் யாதவ் குச்சியை வைத்து நடக்கும் நிலையில் தான் இருந்தார். ஆனால் மெல்ல மெல்ல தற்போது உடல் தகுதி கொஞ்சம் திரும்பி இருக்கிறது. இதனால் சின்ன சின்ன உடற்பயிற்சியை சூர்யகுமார் தொடங்கி இருக்கிறார்.

தற்போது தன்னுடைய காலில் உள்ள தசைகள் வலுப்பெறுவதற்கான பயிற்சியில் சூரிய குமார் யாதவ் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். மெல்லமாக நடப்பது, மெல்லமாக ஓடுவது என்ற பணியையும் சூரிய குமார் யாதவ் செய்து வருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்த சூரியகுமார் யாதவ், தாம் உடல் தகுதியை மீண்டு வரும் பணியில் சரியான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். சூரிய குமார் யாதவை பார்க்கும்போது அவர் ஏப்ரல் மாதம் தான் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என தெரிகிறது. இதனால் சூரிய குமார் யாதவ், மும்பை அணியின் முதல் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு குறைவாக தான் இருக்கிறது.

Story first published: Thursday, February 29, 2024, 7:30 [IST]
Other articles published on Feb 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+