Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs RR - இவரை பார்த்தாலே கால் நடுங்குதே.. ரோகித்தை பின்தொடரும் வேதனை.. இப்படி ஒரு குறையா

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மன்னனாக விளங்கும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு, ஒரு குறை காலம் காலமாக பின் தொடர்ந்து வருவது அவருடைய ரசிகர்களை ஏமாற்றம் அடையும் செய்து இருக்கிறது.

டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்திலும் பல ரெகார்ட்ஸ்களை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். கடந்த முறை 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

IPL 2024 - Trent Boult Exposed Rohit sharma Problem about Facing Left arm fast bowler

இந்த தொடரில் அவர்தான் கேப்டனாக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு டி20 கிரிக்கெட் கொள்வது என்பது மிகவும் ஒரு குறையாக இருக்கிறது. இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் யாக்கர்களை எதிர்கொள்வது என்பது ரோகித் சர்மாவுக்கு பேய் படம் பார்ப்பது போல் ஆகிவிட்டது. ஷாகின் சா அஃபரடி, டிரண்ட் பவுல்ட், மிட்செல் மார்ஷ் என அதிவேக இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டாலே ரோகித் சர்மா ஆட்டம் இழந்து வருகிறார்.

இவர்களை எதிர்கொண்டு விளையாடுவது என்பது முடியாத காரியம் என்பது போல் ரோகித் சர்மாவுக்கு மாறிவிட்டது. இந்திய அணி டி20 போட்டிகளில் தோற்கும் போது எல்லாம் ரோகித் சர்மா இடதுகை வேகப்பந்துவீச்சாளரிடம் தன்னுடைய விக்கெட்டை மிக விரைவில் இழப்பதே ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா ட்ரெண்ட் பவுல்ட் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சாம்சனிடம் கேட்ச் ஆகி கோல்டன் டக் ஆகிறார்.

இது ரசிகர்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் பொருத்தவரை பவுல்டிடன் ரோகித் சர்மா ஆட்டம் இழப்பது இது இரண்டாவது முறையாகும். மொத்தம் பவுல்ட்டிடம் 20 பந்துகளை ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா எதிர்கொண்டு இருக்கிறார். இதில் அவர் 17 ரன்களை மட்டுமே எடுத்து இரண்டு முறை ஆட்டம் இழந்திருக்கிறார். இந்தக் குறையை சரி செய்யாத வரை ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது என்பது தேவையற்றதாகும்.

ஏனெனில் ரோகித் சர்மாவை சமாளிக்க இப்படி ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை அனைத்து அணி கேப்டனும் பயன்படுத்தினால் ரோகித் சர்மா இப்படி கோல்டன் டக் ஆவார். இது இந்திய அணிக்கு தான் பின்னடைவு ஏற்படுத்தும் என்பதால் 37 வயதான ரோஹித் சர்மா இந்த குறையில் இருந்து மீள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Monday, April 1, 2024, 21:28 [IST]
Other articles published on Apr 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+