Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025-மும்பை அணி எந்த 2 வீரர்களை RTM மூலம் தேர்வு செய்யும்? அம்பானியிடம் இருந்து தப்புவாரா ரோகித்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரர்களை தேர்வு செய்யும் எந்த வீரர்களை அணியை விட்டு விடுவிக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

வீரர்களை தக்க வைக்கும் போது முதலாவது வீரருக்கு 18 கோடி ரூபாயும், இரண்டாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 11 கோடி ரூபாயும், நான்காவது வீரருக்கு 18 கோடி ரூபாயும் ஐந்தாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

ipl 2025 ipl retention mumbai indians rohit sharma 2025


இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற நான்கு ஸ்டார் வீரர்களை ஏலத்திற்கு முன்பே வாங்கிக் கொள்ள முடியும். எனினும் ரோகித் சர்மா தமக்கு மும்பை தரும் 18 கோடி ரூபாய் வேண்டாம். என்னை அணியை விட்டு விடுவித்துக் கொள்ளுங்கள் என்று கூறினாலும், மெகா ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணி நினைத்தால் ஆர்.டி.எம் கார்டை பயன்படுத்தி மீண்டும் அவரை அணிக்குள் எடுத்துக் கொள்ள முடியும்.

எனினும் ரோகித் சர்மா சம்பளத்தை மட்டுமே எதிர்பார்ப்பார் என்றும் எந்த அணியாக இருந்தாலும் பரவாயில்லை என்றுதான் நினைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவது அல்லது நான்காவது வீரராக 18 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொள்ளும். எனினும் ஏலத்திற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொண்டு இரண்டு வீரர்களை ஆர்.டி.எம் கார்டு மூலம் தேர்வு செய்து கொள்ளும்.

இந்த நிலையில் எந்த இரண்டு வீரர்கள் ஆர் டி எம் கார்டு மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் வாங்கப்படுவார்கள் என்று தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி இசான் கிசன் ஏலத்தில் விடுவித்து விடும். இதைத் தொடர்ந்து ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி இஷான் கிஷன் எந்த விலைக்கு போகிறாரோ அவரை மீண்டும் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் வாங்கிக் கொள்ளலாம்.

ஒருவேளை இசான் கிஷன் அதிக விலைக்கு ஏலத்தில் செல்வார் என மும்பை இந்தியன்ஸ் கணித்தால் அவரை ஐந்தாவது வீரராகவும் கூட தக்க வைத்துக் கொள்ள முடியும். இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி இந்தியாவின் இளம் அதிரடி வீரர் திலக் வர்மாவை ஆர்டி எம் கார்டு பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம். இதனால் இரண்டு ஆர்.டி.எம் கார்டை மும்பை பயன்படுத்தினால், அது திலக் வர்மா மற்றும் இசான் கிசன் ஆக இருக்கும் அல்லது ஒரு ஆர்.டி.எம் கார்டு மட்டும்தான் என்றால் அது திலக் வர்மாவாக இருக்கும்.

Story first published: Wednesday, October 2, 2024, 23:55 [IST]
Other articles published on Oct 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+