For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

BREAKING - ஐபிஎல் 2025 மும்பை அணியில் தொடரும் ரோகித் சர்மா.. 5 வீரர்கள் தேர்வு .. விவரம்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது. ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரர்களை தக்க வைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஏனென்றால் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா விலகியதால் அவர் வேறு அணிக்கு செல்லலாம் என்று தகவல் வெளியானது. அது மட்டுமல்லாமல் சூரியகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் தங்களுக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டது.

ipl 2025 mumbai indians rohit sharma bumrah 2025

இதனால் மும்பை அணியில் இருந்து பெரிய தலைகள் வேறு அணிக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த தருணத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த ஐந்து வீரர்களை தக்க வைக்க போகிறது என்ற செய்திகள் வெளியாகிறது. அதன்படி ரோகித் சர்மா வேறு அணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை முதல் வீரராக தேர்ந்தெடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி முடிவெடுத்திருக்கிறது.

இதன் மூலம் ரோகித் சர்மாவுக்கு 18 கோடி சம்பளம் கிடைக்கும். இதன் அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை கொடுத்துவிட்டு அவருக்கு 14 கோடி ரூபாய் சம்பளத்தை மும்பை அணி கொடுக்கப் போகிறது.

மூன்றாவது வீரராக சூரியகுமார் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைக்க போகிறது. சூரியகுமார் யாதவுக்கு 14 கோடி வழங்க மும்பை அணி முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. மேலும் சூரிய குமார் யாதவ்க்கு கூடுதல் சம்பளம் கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதை அடுத்து மும்பை அணி பும்ராவை நான்காவது வீரராக தக்க வைத்துக் கொள்ளப் போகிறது.

பும்ராவுக்கு 18 கோடி ரூபாய் சம்பளத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வழங்க இருக்கின்றது. இதன் மூலம் பும்ரா வேறு அணிக்கு செல்லாமல் இருப்பதை அம்பானி குடும்பம் தடுத்திருக்கிறது. இதேபோன்று திலக் வர்மாவை 5வது வீரராக தக்க வைக்க மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு எடுத்திருக்கிறது.

எனினும் திலக் வருமாவுக்கு ஆறு முதல் எட்டு கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி விக்கெட் கீப்பரான இசான் கிஷன் தக்கவைக்கப்பட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இசான் கிஷன் வேறு அணிக்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Wednesday, October 30, 2024, 21:12 [IST]
Other articles published on Oct 30, 2024
English summary
IPL 2025- Mumbai Indians Retained Rohit sharma - Suryakumar and Bumrah ஐபிஎல் 2025 மும்பை அணியில் தொடரும் ரோகித் சர்மா.. 5 வீரர்கள் தேர்வு .. விவரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+