Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ.79 கோடி காலியாகிடும்.. 6 வீரர்களை தக்க வைக்க வாய்ப்பே இல்லை.. விழிபிதுங்கும் மும்பை அணி!

மும்பை: ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கான விதிமுறைகள் வெளியாகியுள்ள நிலையில், மொத்தமாக 5 சர்வதேச வீரர்கள் மற்றும் ஒரு உள்ளூர் வீரர் உட்பட 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பை அணி நிர்வாகம் யார் யாரை தக்க வைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் மற்றும் ஒரு உள்ளூர் வீரரை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் 5 வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கு மட்டும் மொத்தமாக ரூ.75 கோடி செலவிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன்பின் கடைசி ரிடென்ஷனுக்காக ரூ.4 கோடி அளிக்க வேண்டும்.

ipl 2025 mumbai indians rohit sharma

மொத்தமாக பர்ஸ் வேல்யூ ரூ.120 கோடியாக உயர்த்தப்பட்ட நிலையில், ரூ.79 கோடியை ரீடெய்ன் செய்வதற்கே செலவு செய்ய வேண்டும். பின்னர் மீதமுள்ள ரூ.41 கோடியை வைத்து மெகா ஏலத்தில் மீதமுள்ள 19 வீரர்களை வாங்க வேண்டும். இது பல்வேறு அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் சில அணிகள் 3 வீரர்களை மட்டும் ரீடெய்ன் செய்துவிட்டு, 3 ஆர்டிஎம் வாய்ப்புடன் ஏலத்தில் பங்கேற்கலாம்.

அந்த வகையில் மும்பை அணியில் ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்களை தக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவர்களில் எந்த வீரரை மெகா ஏலத்தில் விட்டாலும் மற்ற அணிகள் கட்டாயம் ரூ.20 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்குவதற்கு தயாராக இருப்பார்கள். அதில் பஞ்சாப் அணியில் ரூ.18 கோடிக்கு ரீடெய்ன் செய்யும் அளவிற்கான வீரர்கள் இல்லை.

இதனால் மொத்தமாக 6 ஆர்டிஎம் வாய்ப்புகளுடன் மெகா ஏலத்தில் பங்கேற்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் 4 பேரையும் ரீடெய்ன் செய்தாலே, ரூ.61 கோடி காலியாகிவிடும். இதுமட்டுமல்லாமல் திலக் வர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் ஒருவரை மட்டுமே ஆர்டிஎம் மூலமாக மும்பை அணியால் வாங்க முடியும்.

அதேபோல் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களில் நமன் திர், ஆகாஷ் மத்வால் மற்றும் அன்சுல் கம்போஜ் உள்ளிட்ட வீரர்கள் மட்டுமே சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இவர்களில் ஒருவரை மட்டுமே மும்பை அணியால் தக்க வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள விதிமுறைகள் மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, September 29, 2024, 11:20 [IST]
Other articles published on Sep 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+