சிஎஸ்கே வீரர் தான் நம்பர் 1.. 2025 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி ஊதா தொப்பியை பெற வாய்ப்பு!
லக்னோ: 2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றும் முடிவடைந்துள்ள நிலையில், அதன் முடிவில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் யார் என்ற பட்டியலை இப்போது பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் முடிவில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளருக்கு ஊதா தொப்பி வழங்கப்படும்.
இந்த ஆண்டு லீக் சுற்று முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமது முதலிடத்தில் இருக்கிறார். அவர் 14 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அடுத்த இடத்தில் 23 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கும் குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா பிளே ஆஃப்-பில் விக்கெட் வீழ்த்தினால் நூர் அஹமதை முந்த வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லையெனில் நூர் அஹமது இந்த ஆண்டுக்கான ஊதா தொப்பியை வெல்வார்.

ஐபிஎல் 2025 லீக் சுற்றின் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் :
- நூர் அகமது (சென்னை சூப்பர் கிங்ஸ்): 14 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்டுகள்.
- பிரசித் கிருஷ்ணா (குஜராத் டைட்டன்ஸ்): 14 இன்னிங்ஸ்களில் 23 விக்கெட்டுகள்.
- டிரென்ட் போல்ட் (மும்பை இந்தியன்ஸ்): 13 இன்னிங்ஸ்களில் 19 விக்கெட்டுகள்.
- ஜோஷ் ஹேசில்வுட் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு): அவர் இந்த ஆண்டு 10 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில், அதில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி நான்காவது இடத்தில் இருக்கிறார்.
- அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப் கிங்ஸ்): 13 இன்னிங்ஸ்களில் 18 விக்கெட்டுகள்.
சிறந்த பந்துவீச்சு சராசரி (குறைந்தபட்சம் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில்)
இந்த ஆண்டு குறைந்தபட்சம் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில், சிறந்த பவுலிங் சராசரி வைத்திருப்பவர்:
- ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்): இந்த ஆண்டு 10 போட்டிகளில் மட்டுமே விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, அதில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி 14.64 என்ற பவுலிங் சராசரியை வைத்துள்ளார்.
- நூர் அகமது (சென்னை சூப்பர் கிங்ஸ்): 17.00 என்ற பவுலிங் சராசரி வைத்துள்ளார்.
- ஜோஷ் ஹேசில்வுட் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு): 17.27 என்ற பவுலிங் சராசரி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications