Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 கிங்.. 2 பிரம்மாண்ட சாதனைகளை செய்த ஹிட்மேன்.. 12000 ரன், 260 சிக்ஸ் அடித்த ரோகித் சர்மா

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, 46 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார் ரோகித் சர்மா. மேலும், டி20 போட்டிகளில் 12,000 ரன்களைக் கடந்து, விராட் கோலியுடன் இணைந்து பிரம்மாண்ட மைல்கல் சாதனையைப் பதிவு செய்தார்.

அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார். இதற்கு முன் கீரான் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 258 சிக்ஸர்கள் அடித்த வீரராக இருந்தார். அவரது சாதனையை ரோகித் சர்மா தற்போது முறியடித்துள்ளார்.

Rohit Sharma Mumbai Indians Kieron Pollard IPL 2025 IPL

டி20 போட்டிகளில் 12000 ரன்கள் அல்லது அதற்கு மேல் எடுத்த வீரர்கள் -

கிறிஸ் கெய்ல் - 14562 ரன்கள் (463 போட்டிகள்)

அலெக்ஸ் ஹேல்ஸ் - 13610 ரன்கள் (494 போட்டிகள்)

சோயிப் மாலிக் - 13571 ரன்கள் (557 போட்டிகள்)

கீரான் போலார்டு - 13537 ரன்கள் (695 போட்டிகள்)

விராட் கோலி - 13208 ரன்கள் (407 போட்டிகள்)

டேவிட் வார்னர் - 13019 ரன்கள் (404 போட்டிகள்)

ஜோஸ் பட்லர் - 12469 ரன்கள் (442 போட்டிகள்)

ரோகித் சர்மா - 12058 ரன்கள் (456 போட்டிகள்)

டி20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் -

260 - ரோகித் ஷர்மா
258 - கீரன் பொல்லார்ட்
127 - சூரியகுமார் யாதவ்
115 - ஹர்திக் பாண்டியா
106 - இஷான் கிஷன்

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 143 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார். மற்றொரு துவக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு வில் ஜாக்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் சூரியகுமார் யாதவும் ரோகித் சர்மாவும் இணைந்து அதிரடியாக விளையாடினர்.

ரோகித் சர்மா 46 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்து இருந்தார். இதன் மூலம் அவர் டி20 போட்டிகளில் 12,000 ரன்களைக் கடந்த எட்டாவது வீரர் என்ற சாதனையை செய்தார். மேலும் இந்திய அளவில் இந்த சாதனையை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இதற்கு முன் இந்திய அளவில் விராட் கோலி மட்டுமே இந்த மைல்கல்லை எட்டி இருந்தார். விராட் கோலி தற்போது 407 டி20 போட்டிகளில் 13,208 ரன்கள் எடுத்திருக்கிறார். ரோகித் சர்மா 456 போட்டிகளில் 12,058 ரன்கள் எடுத்திருக்கிறார்.

அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா தற்போது 260 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார். கீரான் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 258 சிக்ஸர்களை அடித்திருந்தார். அவரது சாதனையை ரோகித் சர்மா முறியடித்து இருக்கிறார்.

Story first published: Thursday, April 24, 2025, 8:56 [IST]
Other articles published on Apr 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+